127 டெசிபல்.. எடுத்ததும் சிவம் துபே அடுத்தடுத்த 2 சிக்ஸர்.. அதிர்ந்த சேப்பாக்கம்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரம்

0
220
Dube

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டி, சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து படைப்பதாக அமைந்திருக்கிறது. இன்று அந்த அணியில் வந்த ஏறக்குறைய எல்லா பேட்ஸ்மேன்களும் வான வேடிக்கை காட்டி விட்டு சென்றிருக்கிறார்கள்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு நியூசிலாந்தை சேர்ந்த இடதுகை துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா ஆறு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் என வெறும் இருபது பந்தில் 46 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ஸ்டெம்பிங் ஆனார். இதற்கு அடுத்து ஸ்பின்னர்கள் வர ஆரம்பித்ததால் சிவம் துபேவுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் திட்டமும் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிவம் துபேவை இறக்குவதாகவே இருந்தது. இதன் காரணமாக மூன்றாவதாக பேட்டிங் செய்ய வந்த ரகானே ஸ்பின்னர்களை அடிக்க முயற்சி செய்து ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்தது சிஎஸ்கே அணியின் ரன் வேகத்திற்கு மிகப் பெரிய உதவி செய்தது போல அமைந்தது.

சிவம் துபே உள்ளே வந்த பொழுது தமிழகத்தின் ஸ்பின்னர் சாய் கிஷோர் பந்துவீச்சில் இருந்தார். அவரை எதற்கு சிஎஸ்கே அணியில் வைத்திருக்கிறார்களோ அதை வந்த உடனே சிவம் துபே செய்தார். சாய் கிஷோரின் முதல் பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸரையும், இரண்டாவது பந்தை மிட் விக்கெட் திசையில் சிக்ஸரையும் அடித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தை அலறவிட்டார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் சிவம் துபேவை என்ன காரணத்திற்காக எதிர்பார்த்து இருந்தார்களோ, அதை சிவம் துபே வந்த முதல் இரண்டு பந்திலும் செய்து காட்டியதால், சிஎஸ்கே ரசிகர்களின் ஆரவாரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானம் அதிர்ந்தது என்றே கூறலாம். மகேந்திர சிங் தோனி களத்திற்கு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 233 ஸ்ட்ரைக் ரேட்.. ரசித் கானை முதல் பந்தில் சிக்ஸர்.. 8.40 கோடி சமீர் ரிஸ்விக்கு தோனியின் ரியாக்சன்

இன்று சிவம் துபே இரண்டு சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்த பொழுது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எழுந்த ஆரவாரத்தில் டெசிபல் அளவு 127 டெசிபல் இருந்தது. இது மட்டும் இல்லாமல் 8.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இளம் வீரர் சமீர் ரிஸ்வி ரஷித் கானின் முதல் பந்தில் சிக்சர் அடிக்க, மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானம் அதிர்ந்தது. இன்றைய போட்டி அவர்களுக்கு பெரிய விருந்தாக மாறி இருக்கிறது.