சமீர் ரிஸ்விக்கு முதல் பந்தே.. கேப்டன் ரிஷப் பண்ட் போட்ட மாஸ்டர் பிளான்.. வேற மாதிரி ரகம்

0
756
Sameer

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடுகிறது. அதில் ஒரு போட்டியில் இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில்பேட்டிங் செய்தது.

டெல்லி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். டேவிட் வார்னர் 52, பிரித்வி ஷா 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இவர்கள் தந்த துவக்கத்தை அடுத்து வந்த யாரும் பெரிதாக பயன்படுத்தவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடருக்கு திரும்பி இருக்கும் கேப்டன் ரிஷப் பண்ட் பழைய முறையில் திரும்பி வந்து 32 பந்துகளில் அதிரடியாக 51 ரன் எடுத்து, டெல்லி அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். சிஎஸ்கே அணியின் தரப்பில் பதிரனா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு துவக்கவே பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. கலீல் அகமது மற்றும் இசாந்த் சர்மா பந்துவீச்சை சிஎஸ்கே பேட்ஸ்மேன்களால் கணிக்கவே முடியவில்லை. பந்து ஆடுகளத்தில் பவுன்ஸ் உடன் சீறியது. கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்தரா 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து ரகானே மற்றும் டேரில் மிட்சல் இணைந்து அரை சதத்திற்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். டேரில் மிட்சல் 34, ரகானே 45 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி உடனடியாக பேட்டிங் செய்ய வர வேண்டியதாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க :மும்பை வான்கடேவில் ஹர்திக்கு எதிரா கத்தினால் வெளியே துரத்தப்படுவார்களா? – உண்மை தகவல் வெளியானது

இந்த நிலையில் உள்ளே வந்த சமீர் ரிஸ்வி முகேஷ் குமாரின் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் ஆனார். சமீர் ரிஸ்வி உள்ளே வந்ததும், கேப்டன் ரிஷப் பண்ட் பவுலர் முகேஷ் குமாரிடம் பந்தை மேலே போட வேண்டாம் என்றும், ஆடுகளத்தில் நன்றாக குத்தி குட் லென்த்தில் போடும்படியும் கூறினார். சமீர் ரிஸ்வி மேலே வரும் பந்தை நன்றாக அடித்து விளையாடக் கூடியவராக இருப்பதை ரிஷப் பண்ட் உணர்ந்து, இந்த பிளானை முகேஷ் குமாருக்கு கொடுக்க, முதல் பந்திலேயே அது வேலை செய்து சமீர் ரிஸ்வியை வெளியே அனுப்பி விட்டது. இன்று பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டனாகவும் ரிஷப் பண்ட் கலக்கி வருகிறார்.