நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவது குறித்து அதற்கான காரணங்கள் பற்றி அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தக்க வைத்திருந்த பல பெருமைகளை இழந்து கொண்டு வருகிறது. தற்போது சென்னை சேப்பாக்கத்தில் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி தொடர்ந்து நான்கு போட்டிகளை ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தோற்று இருக்கிறது. அவர்களது பலமாக கருதப்பட்ட கோட்டையிலேயே வெற்றி பெற முடியாதது கவலை அளிப்பதாக இருக்கிறது.
சிஎஸ்கேவின் முக்கிய தவறு நடந்த இடம்
சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் நல்ல திறமை இருக்கின்ற ஏற்கனவே சாதித்து காட்டிய அனுபவம் கொண்ட வீரர்களை வாங்குவார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என நன்றாக தெரியும். இந்த வழியில் சிஎஸ்கே தொடர்ந்து சாதித்து வந்தது.
தற்போதும் அனுபவம் கொண்ட வீரர்களைத் தான் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இதற்கு முன்னால் வாங்கிய வீரர்கள் போல இந்த அனுபவ வீரர்கள் திறமையானவர்கள் இல்லை என்பதுதான் பிரச்சனையை உண்டாக்கி இருக்கிறது. மேத்யூ ஹைடன், பாப் டு பிளேசிஸ், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா என எல்லோருமே மிகப்பெரிய திறமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில்தான் சிஎஸ்கே சறுக்கிவிட்டது.
இது நல்ல அறிவியல் கிடையாது
இது குறித்து பேசி இருக்கும் ஸ்டீபன் பிளமிங் கூறும் பொழுது ” நாங்கள் செய்திருக்கும் விஷயங்கள் மூலமாக நாங்கள் எல்லாவற்றையும் சரி செய்து விட்டோம் என்று சொல்ல முடியாது. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சீராக இருப்பது என்பது மிகவும் கடினமானது. இதன் காரணமாகத்தான் நாங்கள் எங்களுடைய சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். அதே சமயத்தில் மற்ற அணிகள் சிறப்பாகிவிட்டன. இதுதான் ஏலத்தில் இருக்கும் மையப்புள்ளி. எங்களால் ஏலத்தில் சரியானதை பெற முடியாமல் போய்விட்டது”
இதையும் படிங்க : சிஎஸ்கே பிளமிங் எடுத்த அந்த ரூட்ட.. இப்ப நாங்க பிடிச்சிட்டோம்.. ப்ளே ஆப் கன்பார்ம் – நிதிஷ் குமார் ரெட்டி பேட்டி
“நாங்கள் ஏலத்தில் செயல்பட்ட விதம் நல்ல அறிவியல் கிடையாது. ஏலம் என்பது ஒரு திரவ மிருகம் போன்றது. நீங்கள் ஏலத்தில் 25 மணி நேரங்கள் இருக்கிறீர்கள். இது உங்களை மனதளவிலும் உடலளவிலும் சோர்வடைய வைத்து விடுகிறது. அதே சமயத்தில் எங்களுக்கு ஒரு நல்ல அங்கிருந்து கிடைத்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். தற்போது நல்ல அணிக்கான அதிக தொலைவில் எங்கள் அணி கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






