நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியது. இந்த வெற்றிக்குப் பிறகு அந்த அணியின் வீரர் நிதீஷ் குமார் ரெட்டி பிளே ஆப் வாய்ப்பு பற்றி பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததின் காரணமாக தொடர்ந்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்துக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்பித்துக் கொண்டது.
வெற்றி பெற வைத்த வீரர்கள்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கமிந்து மெண்டிஸ் 22 பந்தில் 32 ரன்கள், நிதீஷ் குமார் ரெட்டி 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற வைத்தார்கள்.
மேலும் இந்த போட்டிக்கு முன்பாக கடந்த சீசனில் ஆர்சிபி அணி தொடர்ந்து போட்டிகளை வென்று தகுதி பெற்றது போல தங்களால் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியிருந்தார். இந்த போட்டியின் முடிவுக்குப் பிறகு பேசி இருக்கும் நிதீஷ் குமார் ரெட்டி தாங்களும் ஆர்சிபி அணியையே முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போவதாக கூறியிருக்கிறார்.
பிளே ஆப் சுற்றில் இருப்போம்
இதுகுறித்து நிதீஷ் குமார் ரெட்டி பேசும் பொழுது ” எங்கள் அணியின் உடைய சிந்தனை மற்றும் நாங்கள் அதை செயல்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. நாங்கள் ஒவ்வொரு போட்டியாக எடுத்துக் கொண்டோம் அதில் ஒரு போட்டியை வென்று இருப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நானும் கமிந்து மெண்டிஸ் இருவரும் எளிமையான முறையில் ரன்கள் எடுப்பது பற்றி பேசி வைத்திருந்தோம். பெரிய ஷாட் ஆட நாங்கள் நினைக்கவில்லை. பெரிய பக்கத்திற்கு அவர்கள் அடித்து வைக்க நினைத்த பொழுதும் நாங்கள் சரியாக இருந்தோம்”
இதையும் படிங்க : தோனியின் டி20 வாழ்க்கையில் நடந்த வினோத சோகம்.. எதிரணி ரசிகர்களும் பரிதாபம்.. இப்படியும் நடக்குமா?
“சிஎஸ்கே அணியில் நூர் அகமத் மற்றும் கலீல் அகமத் இருவரும் பந்துவீச்சில் மிகவும் சிறப்பாக இருந்தார்கள். இருந்த போதும் நாங்கள் வெற்றிப் பக்கத்தில் இருந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஆர்சிபி தொடர்ந்து ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நாங்கள் இதை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம். அவர்களால் செய்ய முடித்த பொழுது நம்மால் ஏன் செய்ய முடியாது? நிச்சயம் முடியும்” என்று கூறி இருக்கிறார்.






