நான் அந்த பவுலர் வீடியோவை 100 முறை பார்ப்பேன்.. அவர விளையாடறது கஷ்டம் – ரோகித் சர்மா பேட்டி

0
526
Rohit

ரோகித் சர்மா இன்று கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி எது பல விஷயங்கள் குறித்தான கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அதில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

ரோகித் சர்மாவின் உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் சிறப்பாக ஆரம்பித்து, பல இந்திய முன்னாள் வீரர்களின் கவனத்தைப் பெற்றது. ஆனால் அவரது இந்திய கிரிக்கெட் அணிக்கான பயணம் நல்ல முறையில் அமையவில்லை. 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் தோனி அவரை துவக்க வீரராக கொண்டு வந்த பிறகு எல்லாம் மாறியது.

- Advertisement -

இதன் பிறகும் கூட இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. உள்நாட்டில் அவரிடமிருந்து ரன்கள் சில போட்டிகளில் வந்த போது கூட, அவர் அடுத்தடுத்து புறக்கணிக்கப்பட்டார். பிறகு ரவி சாஸ்திரி முயற்சியில் டெஸ்ட் அணியில் கிடைத்த இடத்தை தக்க வைத்து, இன்று மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருக்கிறார்.

தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசி இருந்த அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புவதாகவும், உலக கிரிக்கெட்டில் தன்னால் ஏதாவது தாக்கத்தை உருவாக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறியிருந்தார். இதில் தான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து ரோகித் சர்மா பேசும்பொழுது “நான் பேட்டிங் செய்ய செல்வதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளரின் வீடியோக்களை 100 முறை பார்த்திருக்கிறேன். அந்தப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன். அவர் இந்த விளையாட்டின் முழுமையான ஒரு ஜாம்பவான். அவர் சாதித்த விதம் மிகவும் அருமையானது. நான் அவரை நிறைய முறை எதிர்கொண்டு இருக்கிறேன். அவர் வேகமாக வீசுவதோடு ஸ்விங் செய்வார். இதைச் செய்வது எளிதானது கிடையாது, மிகவும் கடினமானது. அவர் எனக்கு ஒரு கடினமான போட்டியாளராக இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 ஐபிஎல்: ரியான் பராக் புதிய சாதனை.. ஸ்பெஷல் லிஸ்டில் 5வது வீரர்.. சாம்சனையும் தாண்டினார்

அவர் எல்லாவற்றையும் செய்ய விரும்பினார். ஒவ்வொரு போட்டியையும் ஒவ்வொரு செசனையும் வெல்ல விரும்பினார். இதன் காரணமாக இப்படிப்பட்ட ஒரு வீரருக்கு எதிராக விளையாடியது மகிழ்ச்சி ஆனது. நான் அவருக்கு எதிராக அதிக வெற்றி பெற்றேன் என்பது கிடையாது. இது அவரை சந்திக்கும் பொழுது உண்டான போட்டியை பற்றியது” என்று கூறி இருக்கிறார்.