ஆர்சிபி தோல்வி.. சிஎஸ்கே துஷார் தேஷ்பாண்டே போட்ட பதிவு.. பெங்களூர் ரசிகர்கள் கோபம்

0
36916

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெங்களூர் அணியை பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேற்றி இருக்கிறது.

இந்த சீசனில் இருந்து பெங்களூர் அணி வெளியேற்றப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணி வீரரான துஷார் தேஷ் பாண்டே சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவினை வெளியிட்டதைத் தொடர்ந்து அது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாசை இழந்த பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக பட்டிதார் 34 ரன்கள், விராட் கோலி 33 ரன்களும் லோம்ரோர்32 ரன்களும் குவித்தனர்.

ராஜஸ்தான் அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை அள்ளினார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் காட்மோர் 20 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் குவித்தார்.

பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கி ரியான் பராக் 36 ரன்களும், ஹெட்மயர் 26 ரன்களும் குவிக்க, ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இன்ஸ்டாகிராமில் பெங்களூர் அணி தொடரில் இருந்து வெளியேறியதை குறிக்கும் விதமாக பெங்களூரு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு இருப்பது போன்ற புகைப்படத்தை சிஎஸ்கே ரசிகர்கள் வெளியிட, அதனை சிஎஸ்கே வீரரான துஷார் தேஷ் பாண்டே அதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்து சிஎஸ்கே ரசிகர்கள் வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்கள் என்ற பதிவையும் வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க:தோத்தாலும் பெருமைப்படறேன்.. இந்த ஐபிஎல்-ல ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சி இருக்கோம் – பாப் டு பிளேசிஸ் பேட்டி

இது தற்போது சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் கடந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தியதைத் தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் சென்னை ரசிகர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் அதற்கு இப்போது தக்க பதிலடி சமூக வலைதளங்களில் கொடுத்து வருகிறார்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது பிளே ஆப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னையில் எதிர்கொள்ள உள்ளது.