ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் ஆர்சிபி அணி வீரர்களுக்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் உத்வேகம் அளிக்கும் வார்த்தைகளை கூறியிருக்கிறார்.
நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் சுமாரான பந்துவீச்சால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்கள் குவித்தது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்கள் குவித்து அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது.
தற்போது பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அதைவிட 10 ரன்கள் அதிகமாக அடித்து அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது. அதிகபட்சமாக அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 102 ரன்களும், கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்களும் குவித்தனர். ஆர்சிபி அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பவுலர்கள் 50 ரன்கள் கொடுத்த முதல் அணி என்ற பெருமையும் பெற்று இருக்கிறது.
பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணி விராட் கோலி 42 ரன்கள், அணியின் கேப்டன் டூப்ளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தனர். பின்னர் இறுதிக்கட்டத்தில் விளையாடிய தினேஷ் கார்த்திக் 35 ரன்கள் 83 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
இருப்பினும் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குறித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் பெங்களூர் அணிக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் இனி வரும் ஒவ்வொரு போட்டியையும் நாக் அவுட் போட்டி போன்று எதிர் கொள்ள வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
இது குறித்து அவர் வீடியோவில் கூறும் பொழுது “நிச்சயமாக இது களத்தில் கடினமான இரவு. சன்ரைசர்ஸ் அணி அபாரமாக விளையாடி ஆட்டத்தை முடித்திருக்கிறார்கள். இது நமது படகிலிருந்து காற்று வெளியேற்றப்பட்டது போன்ற உணர்வு. நிச்சயமாக நாங்கள் இதுகுறித்து யோசிப்போம், ஆலோசிப்போம். மீண்டும் அடுத்த போட்டியில் வலுவாக திரும்பி வருவோம். இது நாக் அவுட் சுற்றுக்கான நேரம். எனவே இனி ஒவ்வொரு போட்டியும் நமக்கு அரை இறுதி ஆட்டம் போன்று இருக்கும்”.
இதையும் படிங்க: என்னை டீம்ல எடுக்காதீங்க.. போன மேட்ச் முடிஞ்சதுமே அவங்ககிட்ட சொல்லிட்டேன் – மேக்ஸ்வெல் அதிரடி பேட்டி
மேலும் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் குறித்து கூறிய ஆண்டி பிளவர் “நீங்கள் போட்டியில் போராடிய விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நாம் போட்டியில் தோல்வியடைந்து இருந்தாலும் போராடிய விதம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நீங்கள் டி20 உலக கோப்பை அணிக்கும் ஒரு உந்துதலாக இருக்கிறீர்கள். நன்றாக முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறியிருக்கிறார்.