என் வழி தோனி வழி கிடையாது.. புது ரூட் எடுத்த ருதுராஜ்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு ட்விஸ்ட்

0
496
Ruturaj

இன்று ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி அமைந்திருக்கிறது. இந்த இரு அணிகளும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மோதிக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் நியமிக்கப்பட்டிருக்க, இதேபோல குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரர்களான இவர்கள் இருவரும் கேப்டன் பொறுப்பில் எப்படி செயல்படுவார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வென்று வந்திருக்கிறது. எனவே வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை ஆரம்பித்த இரண்டு அணிகளில் ஒரு அணி இன்றைய போட்டியில் தோல்வியடைய இருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சுப்மன் கில் தோனியின் வழியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வென்ற அணியை மாற்றாமல் அப்படியே சென்றிருக்கிறார். அதே சமயத்தில் ருதுராஜ் மதிஷா தீக்ஷனாவை நீக்கி மதிஷா பதிரனாவை கொண்டு வந்திருக்கிறார். சிஎஸ்கே வென்ற அணி உடன் தொடராமல் வீரரை மாற்றி களம் இறங்கி இருப்பது ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

டாஸ் நிகழ்வில் ருதுராஜ் பேசும்பொழுது “நாங்கள் டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்து இருப்போம். ஆர்சிபி அணிக்கு எதிராக எங்களுக்கு ஒரு நல்ல முதல் ஆட்டம் கிடைத்தது. ஆடுகளம் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடியதைப் போலவே கடினமாக இருக்கிறது. ஆர்சிபி முதலில் சரியாக ஆரம்பிக்காவிட்டாலும் எங்கள் வீரர்கள் நல்ல விதத்தில் திரும்பி வந்தார்கள். இந்த போட்டியில் தீக்சனா இடத்தில் பதிரனா விளையாடுகிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : பஞ்சாப் டீம்ல நானே பாதிக்கப்பட்டேன்.. அவங்க ஜெயிக்கவே மாட்டாங்க காரணம் இதுதான் – சேவாக் குற்றச்சாட்டு

சுப்மன் கில் பேசும் பொழுது “நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வாக இருந்தது. பத்து அணிகள் தொடரில் விளையாடுகின்ற காரணத்தினால் ஒரு போட்டிக்கும் இன்னொரு போட்டிக்கும் இடையில் நல்ல ஓய்வு கிடைக்கிறது. இதனால் நாங்கள் அனைவரும் புத்துணர்ச்சியோடு திரும்பி இருக்கிறோம். மும்பை அணிக்கு எதிராக பந்துவீச்சாளர்கள் மீண்டெழுந்து வந்த விதம் எங்கள் அணியின் தன்மையைக் காட்டுகிறது. நாங்கள் அதே அணியுடன் செல்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.