சூரியகுமாருக்கு பவுலிங் பண்ணவே முடியல.. டி20 உ.கோ-ல் ஏதோ பண்ண போறார் – புகழும் ஹைதராபாத் கோச்

0
8
Surya

நேற்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்தார். அவருக்கு இது இரண்டாவது ஐபிஎல் சதமாக பதிவானது. அவரது பேட்டிங் குறித்து ஹைதராபாத் அணியின் துணை பயிற்சியாளர் சைமன் ஹெல்மட் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

நேற்று மும்பை ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு ஆரம்பத்தில் அவ்வளவு வசதியாக இல்லை. பந்து நன்றாக சீம் ஆகி சென்றது. இரண்டு அவுட் வாய்ப்பில் இருந்து ஹெட் தப்பிய ஒரே காரணத்தினால் மட்டுமே அவரால் 30 பந்துகளில் 48 ரன்கள் எடுக்க முடிந்தது. அந்த அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து மும்பை அணி விளையாடும் பொழுதும் ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருந்தது. எனவே மும்பை அணி முதல் மூன்று விக்கெட்டுகளை வெகு வேகமாக இழந்துவிட்டது. இந்த நேரத்தில் சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் ஜோடி சேர்ந்து புத்திசாலித்தனமான பொறுமையை காட்டினார்கள்.

பிறகு பந்து சீம் ஆவது குறைந்ததும், சூரியகுமார் யாதவ் தன்னுடைய வழக்கமான அதிரடியில் இறங்க திலக் வர்மா அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தார். அற்புதமாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 51 பந்தில் 102 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடினமான ஒரு ஆடுகளத்தில் வெற்றியை தேடி தந்தார்.

இதுகுறித்து ஹைதராபாத் அணியின் துணை பயிற்சியாளர் சைமன் ஹெல்மட் கூறும்பொழுது “சூரியகுமார் யாதவுக்கு பந்து வீசுவது என்பது கடினமான ஒன்று. அவர் சரளமாக விளையாடும் மனநிலையில் இருக்கும் பொழுது, அவர் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான பேட்ஸ்மேன். நேற்று போட்டி முழுவதும் பெரிய தவறுகள் எதையும் செய்யவில்லை. நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் கலந்து அவரை அவுட் ஆக முயற்சி செய்தோம். ஆனால் இன்று இரவு அவர் மிகவும் சிறப்பாக இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : சூரியகுமார் சதம்.. ஆனா எல்லா கிரிக்கெட்டிலும் வெற்றி பெற முடியும் ஆள் இந்த பையன்தான் – பொல்லார்ட் பேச்சு

சூரியகுமார் யாதவ் ஒரு விதிவிலக்கான கிரிக்கெட் வீரர். அவர் தனக்கான இடத்தை எப்பொழுதும் இந்திய அணியில் வாங்கப் போகிறார் என்பது உறுதி. மேலும் இந்திய அணிக்காக டி20 உலக கோப்பையில் செல்வாக்கு செலுத்தக்கூடிய பேட்ஸ்மேனாக சூரியக்குமார் யாயாத இருப்பார்” எனக் கூறியிருக்கிறார்.