ராஜஸ்தான் ராயல்ஸ் முக்கிய வீரர் ஐபிஎல்-ல் இருந்து விலகல்.. சங்கக்கரா திட்டம் வீண்.. பெரிய பின்னடைவு

0
4599
IPL

2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட முதல் ஐபிஎல் சீசனில் யாரும் எதிர்பாராத விதமாக இளம் வீரர்களைக் கொண்டு லெஜெண்ட் ஷேன் வார்னே ராஜஸ்தான் ராயல் அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார்.

அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரிய அளவுக்கு செயல்படாமல் இருந்து வந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு குமார் சங்கக்கரா பயிற்சியில் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையில் மெகா ஏலத்தில் சிறப்பான அணி உருவாக்கப்பட்டது. இந்திய சுழல் கூட்டணி ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சாகல் கொண்டு உருவாக்கப்பட்டது.

- Advertisement -

இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றது. அந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. ஆனாலும் உருவாக்கப்பட்ட அணி வலிமையாகவே இருந்தது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் ப்ளே ஆப் சுற்றுக்கு உறுதியாக தகுதி பெறும் வகையில் முதல் ஏழு ஆட்டங்களை விளையாடி 5 போட்டிகளை வென்று இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மேற்கொண்டு விளையாடிய ஏழு போட்டிகளில் பெரிய வெற்றிகள் பெறாமல் பரிதாபமாக முதல் சுற்றோடு வெளியேறியது.

இந்த ஆண்டு பொறுத்தவரையில் ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரல் புதிய இந்திய நட்சத்திரங்களாக உருவெடுத்து இருக்கிறார்கள். எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முகாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. அவர்கள் இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான போட்டியில் வலிமையான அணியாகவே தென்படுகிறார்கள்.

- Advertisement -

சங்கக்கரா திட்டம் வீணானது

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். காரணம் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டி இருந்தால், ஃப்ரெண்ட் போல்டை வெளியில் வைத்து இவரை விளையாட வைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எப்போதும் தயாராக இருந்தது. கடந்த ஐபிஎல் தொடரிலும் இப்படி ஆறு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்க எட்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் சாகலுக்கு மாற்று வீரராகவும் இவர் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : ருதுராஜை கேப்டனாக்க தோனி முடிவெடுத்தது எப்படி? – சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் சங்கக்கரா இவரை மையமாக வைத்து ஒரு தனித்திட்டத்தையும் கடந்த ஐபிஎல் தொடரில் உருவாக்கி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இவர் ஐபிஎல் தொடரை விட்டு விலகியது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இவர் 2021 ஆம் ஆண்டு இதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்தும் விலகினார். இதன் காரணமாக இவர்களை மீண்டும் ஐபிஎல் தொடரில் சேர்க்கக் கூடாது என்பது போன்ற எதிர்ப்புகள் கூட இருந்தது. தற்போது இவர் விலகி இருக்கும் சூழலில் மேற்கொண்டு என்ன நடக்கும் என்று தெரியவில்லை!