கேப்டன்சியில் ருதுராஜின் 3 சொதப்பல் முடிவுகள்.. பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே-க்கு ஏற்பட்ட சிக்கல்

0
2927
Ruturaj

இன்று சிஎஸ்கே அணி தங்கள் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்து 210 ரன்கள் எடுத்த பொழுதும், சிஎஸ்கே அணி லக்னோ அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு புதிய கேப்டன் ருதுராஜ் எடுத்த மூன்று முடிவுகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.

இன்று டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இரண்டாவது பந்து வீசும் பொழுது பனிப்பொழிவு இருக்கும் என கருதி இந்த முடிவுக்கு அவர் வந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே சிஎஸ்கே அணி பந்து வீசும் போது பனிப்பொழிவு இருந்தது. இது சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் எடுத்த முடிவுகளும் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. மேலும் சொந்த மைதானத்தில் தொடர்ந்து மூன்று போட்டிகள் விளையாடும் வாய்ப்பிலிருந்து, அதில் முதல் போட்டியை சிஎஸ்கே தோற்று இருக்கிறது. இதனால் பிளே ஆப்க்கு செல்ல ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளை வெல்ல வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இன்று தீபக்சகர் புதிய பந்தில் இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். அதற்கு பிறகு அவருக்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. பொதுவாக அவர் புதிய பந்தை வீசுவதில் சிறந்தவர். எனவே அவருக்கு இன்னும் ஒரு ஓவர் பவர் பிளேவில் பந்து வீசும் வாய்ப்பை கொடுத்திருக்கலாம். தோனி மூன்று ஓவர்கள் தீபக் சாஹருக்கு தருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதற்கு அடுத்து அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தும், மொத்தமே சுழற் பந்துவீச்சாளர்கள் நான்கு ஓவர்கள் மட்டுமே பந்து வீசி இருக்கிறார்கள். வழக்கமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்தது 8 ஓவர்கள் சிஎஸ்கே சுழல் பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேத பந்துவீச்சாளர்கள் வீசிய சில ஓவர்களை, சுழல் பந்துவீச்சாளர்கள் வீசும் பொழுது, அதே ரன்கள் சென்றாலும் கூட விக்கெட்டுக்கான வாய்ப்பு கொஞ்சம் அதிகம்.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே தோல்வி.. முக்கிய காரணமாக அமைந்த தீபக் சாஹரின் 2 தவறுகள்.. ரசிகர்கள் கோபம்

மேலும் இந்த போட்டியில் தீபக் சாஹர் இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீசி இருந்த நிலையில், சர்துல் தாக்கூர் மூன்று ஓவர்கள் பந்து வீசி 42 ரன்கள் கொடுத்திருந்தார். அவர் 13 ஓவர்கள் தாண்டி பந்து வீச வந்த பொழுது, அந்த இடத்திலாவது நன்றாக பந்து வீசி இருந்த தீபக் சாஹரை ஒரு ஓவருக்கு பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ருதுராஜ் இரண்டாவது முறையாகவும் இவரை பயன்படுத்தவில்லை. ருதுராஜ் கேப்டன்சியில் செய்த இந்த மூன்று தவறுகளும், இன்று போட்டியை சிஎஸ்கே அணி தோற்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.