ரகானே பாய் ஓபனிங் வந்த காரணம் இதுதான்.. இந்த முடிவை நான்தான் எடுத்தேன் – கேப்டன் ருதுராஜ் விளக்கம்

0
290
Ruturaj

மும்பை வான்கடே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து வெல்வது மிகவும் கடினமான பனிப்பொழிவின் காரணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்து வீழ்த்தியது. இந்த போட்டியில் ரகானே ஏன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வந்தார் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் விளக்கம் அளித்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த சிஎஸ்கே அணிக்கு ரகானே துவக்க ஆட்டக்காரராக வந்தார். கேப்டன் ருதுராஜ் தன்னை மூன்றாவது வீரராக கீழே இறக்கி கொண்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கக் கூடிய விஷயமாக அமைந்திருந்தது.

- Advertisement -

இதற்கு முந்தைய ஆட்டத்தில் ரகானேவுக்கு சிறிது காயம் இருந்த காரணத்தினால் அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. அவருடைய இடத்தில் டேரில் மிட்சல் களம் இறக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பலரும் மூன்றாவது இடத்தை மிட்சலுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தார்கள். இளம் வீரர் சமீர் ரிஸ்வி சரியான பேட்டிங் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால், அவரை யாவது மூன்றாவது இடத்தில் இறக்கிவிட வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் ரகானேவை காயம் சிறிது இருந்தாலும் தைரியமாக அணியில் வைத்ததோடு, அவரை எல்லோரும் மூன்றாவது இடத்திற்கே அனுப்பக்கூடாது என்று சொல்லும் பொழுது, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தைரியமாக முடிவெடுத்து மேலே அனுப்பினார். நேற்று அவர் ரன்கள் எடுக்காவிட்டாலும் கூட, ருதுராஜ் கீழே வந்து 40 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.

தற்பொழுது ஏன் ரகானே துவக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்டார் என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசும்பொழுது ” ரகானே பாய்க்கு சிறிது நிக்கில் இருந்து வருகிறது. எனவே அவர் ஓபனராக வந்தால், அவரால் பவர் பிளேவை பயன்படுத்தி ரன்கள் அடிப்பது எளிதாக இருக்கும் என்று கருதப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே ஜெயிக்கல.. ஜெயிக்க வச்சாங்க.. அங்க நடந்தது இதுதான் – கவாஸ்கர் அதிரடி பேட்டி

இந்த நிலையில்தான் அவரை நாங்கள் துவக்க வீரராக அனுப்பி வைத்தோம். மேலும் என்னால் எந்த இடத்தில் இறங்கினாலும் ரன்கள் அடிக்க முடியும். எனவே கேப்டனாக நான் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதனால் நான் ரகானேவை துவக்க ஆட்டக்காரராக அனுப்ப முடிவை எடுத்தேன்” என்று கூறியிருக்கிறார்.