முகேஷ் சௌத்ரி தங்கம் மாதிரி.. பதிரனா நாளை கேகேஆர் அணிக்கு எதிராக விளையாடுவாரா? – சிஎஸ்கே பவுலிங் கோச் பேட்டி

0
346
CSK

நாளை 17வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியும் கேகேஆர் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத சிஎஸ்கே அணியின் மதிஷா பதிரனா விளையாடுவாரா? என்பது குறித்து, அந்த அணியின் பவுலின் பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரையில் 4 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளை வேண்டும் இரண்டு போட்டிகளை தோற்றும் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது. கடைசி இரண்டு போட்டிகளில் வெளியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளிடம் தோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த போட்டியில் ஒரே ஓவரில் 27 ரன்கள் தந்த முகேஷ் சவுத்ரி நாளை விளையாடுவாரா? இல்லை காயம் சரியாகி பதிரனா விளையாடுவாரா? என்பது சந்தேகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இதில் என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பது குறித்து சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நாங்கள் எப்பொழுதும் விஷயங்களை செயல்படுத்துவதை பார்க்கிறோம். முடிவுகள் எப்படி வருகிறது என்பதை பார்ப்பதில்லை. முகேஷ் சவுத்ரி ஒரு மோசமான ஓவரை வீசவில்லை. அவர் பந்துவீச்சில் பேட்ஸ்மேன் அடிக்கும் பொழுது அவர் திட்டங்களை மாற்றி இருக்கலாம். நாங்கள் அவருடன் சில பாசிட்டிவான பேச்சு வார்த்தைகளை நடத்தி இருக்கிறோம். அவர் ஆரம்பத்தில் மோசமாக இருந்த போதிலும் கூட அவருடைய திறமை என்னவென்று தெரிந்ததால் அவருடன் ஒட்டிக்கொண்டோம். அவர் தங்கம் மாதிரி. அவர் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றாரோ அதை திருப்பி செய்வார்.

பதிரனா நாளை விளையாடுவாரா என்பது பிசியோவின் முடிவு. ஒரு போட்டியை பார்த்து நாங்கள் அவரை நான்கைந்து போட்டிகளில் இழக்க முடியாது. இது பெரிய தொடர். ரச்சின் ரவீந்தராவுக்கு சிறந்த துவக்கம் இரண்டு போட்டிகளில் இருந்தது. அடுத்த இரண்டு போட்டிகள் வெளியில் நடந்தது அவருக்கு கொஞ்சம் பிரச்சினையாக இருக்கலாம். தற்பொழுது புதிய துவக்க ஜோடி விளையாடுகிறது. இவர்கள் ஒரு உறவை உருவாக்க காலம் தேவைப்படும். கான்வே உடனும் காலம் தேவைப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : நாளை கேகேஆர் அணிக்கு எதிராக சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க 2 மாற்றங்கள் செய்யுமா?.. உத்தேச பிளையிங் XI

ருதுராஜ் விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. அவர் சிறந்த பேட்ஸ்மேன். உயர் மட்ட கிரிக்கெட்டின் இயல்பு இதுதான். சில நேரங்களில் இப்படி நடக்கும். அவர் எப்பொழுதும் அமைதியாக இருக்கிறார். தான் என்ன செய்ய வேண்டுமோ, அதில் கவனம் செலுத்த விரும்புகிறார்” என்று கூறியிருக்கிறார்.