நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இரண்டு போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி ஆர் lசிபி மற்றும் குஜராத் ஐட்டம்ஸ் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்றது. மேலும் புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்தில் தொடர்ந்தது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த இரண்டு ஆட்டங்களுக்கு விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்துக்கு சென்று டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து இரண்டு தோல்விகளை அடைந்தது. இதன் காரணமாக தற்பொழுது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. நாளை கேகேஆர் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மைதானத்தில் விளையாடினாலும் கூட, பத்திரனா மற்றும் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இருவர் இல்லாததும், மேலும் கேகேஆர் அணி மிகவும் வலிமையாக இருப்பதும் சிஎஸ்கே அணிக்கு கொஞ்சம் பின்னடைவாக அமைந்திருக்கிறது.
சிஎஸ்கே அணிக்கான இரண்டு மாற்றங்கள்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கடந்த போட்டியில் முதல் வாய்ப்பை பெற்ற முகேஷ் சவுத்ரி ஒரே ஓவரில் 27 ரன்கள் விட்டுத் தந்தார். மேலும் மொயின் அலி உள்ளே வருவதற்காக சமீர் ரிஸ்வி நீக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த இரண்டு முடிவிலும் மீண்டும் சிஎஸ்கே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது.
கேகேஆர் அணி சுழல் பந்துவீச்சை நம்பி விளையாடுகிறது. எனவே சுழல் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடக்கூடிய சமீர் ரிஸ்வியை மீண்டும் உள்ளே கொண்டு வரலாம். இதற்காக மொயின் அலி அல்லது நேரில் மிட்சல் இருவரில் ஒருவரை வெளியே வைக்கலாம். இல்லையென்றால் நேரடியாக ரகானேவை கூட வெளியில் வைக்கலாம்.
மேலும் தீக்சனா பவர் பிளேவில் பந்து வீசக்கூடியவர் என்கின்ற காரணத்தினால், முகேஷ் சௌத்ரி இடத்தில் சர்துல் தாக்கூரை கொண்டு வரலாம். இவர் விக்கெட் டேக்கிங் எபிலிட்டி கொண்டவர் என்பதோடு, பேட்டிங்கிலும் பலம் சேர்க்க கூடியவர். இந்த இரண்டு மாற்றங்களும் தற்பொழுது சிஎஸ்கே அணிக்கு அவசியமானதாக இருக்கிறது.
இதையும் படிங்க : பேட்டிங்ல டிம் டேவிட் என்கிட்ட இத சொன்னார்.. என் பவருக்கான காரணம் இந்தியர்கள் மாதிரிதான் – ரொமாரியோ ஷெப்பர்ட் பேச்சு
கேகேஆர் அணிக்கு எதிராக சிஎஸ்கே உத்தேச பிளேயிங் லெவன் :
ருதுராஜ், ரச்சின் ரவீந்தரா, ரகானே, சிவம் துபே, சமீர் ரிஸ்வி, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி, சர்துல் தாக்கூர், தீபக்,சகர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே.