எல்லாம் பொய்.. ஹர்திக் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறார்.. நேர்ல பார்த்தேன் – கெவின் பீட்டர்சன் பேச்சு

0
455
Hardik

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சொந்த மைதானத்தில் விளையாடியதாலும், மேலும் நல்ல துவக்கம் கிடைக்கும் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்திருப்பது ஹர்திக் பாண்டியா மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா இப்படியான விமர்சனங்களால் தான் பாதிக்கப்படவில்லை என நடிக்கிறார் என கெவின் பீட்டர்சன் கூறியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சுக்கு வந்து மகேந்திர சிங் தோனிக்கு கடைசி நான்கு பந்துகளில் 20 ரன்கள் கொடுத்தார். மேலும் பேட்டிங் செய்ய வந்து அவர் முக்கியமான நேரத்தில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

மேலும் கேப்டன்ஷியில் சிவம் துபே என்ற ஒரு தனிப்பட்ட வீரருக்காக மொத்தமாக சுழல் பந்துவீச்சாளர்களை ஆட்டத்தில் இருந்து வெளியே நகர்த்தி விட்டது விமர்சனங்களை இன்னும் அதிகமாக இருக்கிறது. இந்த இடத்தில் அவர் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு மைதானத்தில் தொடர்ந்து ரசிகர்களால் எதிர்ப்பு காட்டப்பட்டுக் கொண்டே வருகிறது. ஆனால் இதற்கு ஹர்திக் பாண்டியா எந்தவித பாதிப்பையும் அடையவில்லை என இசான் கிஷான் கூட தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில்தான் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஹர்திக் பாண்டியா விமர்சனங்களால், ரசிகர்கள் எதிர்ப்பால் பாதிப்படைந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியா மொத்தமாக விளையாட்டில் விலகி இருப்பது போல தோன்றுவதால் அவர் பாதி படைத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் டாஸ் போடும் பொழுது மிக அதிகமாக சிரிக்கிறார். தான் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக் கொள்ள நடிக்கிறார். நான் அங்கு தான் இருந்தேன் என்னால் அவர் மகிழ்ச்சியாக இல்லை என்று சொல்ல முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : தகப்பன் பிள்ளைகளை கட்டி அணைப்பது போல.. பிராவோவின் உணர்வுபூர்வமான மெசேஜ்.. சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ச்சி

சிஎஸ்கே முன்னாள் கேப்டன் சிங்கம் போல மைதானம் முழுக்க பந்துகளை அடித்து நொறுக்குவதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று வெளியில் பேசுவதை நாம் கேட்கிறோம். இது நிச்சயம் ஹர்திக் பாண்டியாவை புண்படுத்துகிறது. ஏனென்றால் அவருக்கும் உணர்வுகள் உண்டு. அவர் ஒரு இந்திய வீரர் தன்னையும் இப்படி நடத்த வேண்டும் என்று நினைப்பார். அப்படித்தான் நடத்தப்படாத பொழுது அவர் பாதிப்படைகிறார் என்பது தான் உண்மை” எனக் கூறியிருக்கிறார்.