ருதுராஜ்கிட்ட இந்த குவாலிட்டி இருக்கு.. இதுக்காகத்தான் அவரை கேப்டன் ஆக்கினோம் – சிஎஸ்கே பவுலிங் கோச் பேட்டி

0
83
Ruturaj

நடப்பு 17 ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, நல்ல ரன் ரேட்டும் கிடைத்ததால் புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் நீடித்து வருகிறது.

இன்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் மோத இருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு அணிகளிடமும் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து வருகிறது. எனவே அந்த அணிக்கு வெற்றி அவசியமான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ருதுராஜ் கேப்டன்சி பொறுப்பில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறார் என்பது அந்த அணிக்கு நல்ல விஷயமாக அமைந்திருக்கிறது. முதல் போட்டியில் ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளிசிஸ் அதிரடியாக பவர் பிளேவில் ஆரம்பித்த பொழுது, ருதுராஜ் செய்த பவுலிங் மாற்றங்கள் அவரது கேப்டன்சி திறமையை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில் கேப்டனாக ருதுராஜ் குறித்து சிஎஸ்கே அணியின் பௌலிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறும் பொழுது “ருதுராஜ் மிகவும் அமைதியான நபர் என்று நான் நினைக்கிறேன். அவர் விளையாட்டில் மாணவராக இருக்கிறார். எப்பொழுதும் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். அவர் இங்கு வந்தது முதல் எங்களிடம் நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார். பல்வேறு முக்கியமான விஷயங்கள் பற்றி தொடர்ந்து கேட்கிறார். இது நல்ல ஒரு அம்சம். ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக இருப்பது என்பது திறமை மற்றும் ஸ்டேட்டர்ஜி கொண்டிருப்பது மட்டும் இல்லை. ஒரு ஸ்டேட்டர்ஜியை ஏன் எதற்கு என்று புரிந்து கொள்வதும்தான்.

ஒரு பீல்டு பொசிஷன் ஏன் இப்படி இருக்கிறது? ஏன் சில யுத்திகளை பயன்படுத்துகிறோம்? இதை நீங்கள் புரிந்து கொண்டால் அதற்கேற்றவாறு திட்டங்களை மாற்றி அமைத்து வெற்றிகரமாக செயல்படலாம். கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த புரிதல் மிகவும் அவசியமான ஒன்று. நீங்கள் ஸ்டேட்டர்ஜி எதற்காக உருவாக்கப்பட்டது? ஏன் அதைப் பயன்படுத்துகிறார்கள்? என்று புரிந்து கொள்வது அவசியம்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னைக்கு தோனி 6 அடிச்சு முடிப்பாரு.. இல்ல பண்ட் 4ல முடிப்பாரு – ஹஸ்ஸி பாண்டிங் சவால்

ருதுராஜ் இயற்கையாகவே அமைதியான பாவம் கொண்ட எதற்கும் பதட்டப்படாத நபர். இந்த கண்ணோட்டத்தில் இருந்து அவர் சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.மேலும் ஒரு கேப்டனாக இருப்பதில் அர்த்தம் என்னவென்று புரிந்து கொண்டிருக்கும் நபர்கள் அவரைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். இதனால் அவருக்கு கேப்டன் பொறுப்பு இயல்பாக நல்லபடியாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.