இன்னைக்கு தோனி 6 அடிச்சு முடிப்பாரு.. இல்ல பண்ட் 4ல முடிப்பாரு – ஹஸ்ஸி பாண்டிங் சவால்

0
118
Dhoni

17ஆவது ஐபிஎல் சீசனில் இன்று ஞாயிறு விடுமுறை நாளில் 2 போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது போட்டியில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதல் போட்டியில் விளையாடும் இரண்டு அணிகளும் இரண்டு போட்டியில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இருக்கின்றன. இரண்டாவது போட்டியில் விளையாடும் சிஎஸ்கே அணி 2 போட்டிகளை வென்றும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இரண்டு போட்டிகளை தோற்றும் இருக்கிறது. எனவே ரிக்கி பாண்டிங் தலைமை பேச்சாளராக இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அதிகம் இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய பேட்டிங் வரிசை மிகவும் பலமாக இருக்கிறது. புதிதாக சிஎஸ்கே அணிக்கு வந்த ரச்சின் காட்டும் அதிரடி எதிரணி பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைக்கிறது. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரனா இருவரையும் கொண்டு வந்திருப்பதால் பவுலிங் யூனிட் மிக வலிமையாக மாறியிருக்கிறது.

மேலும் களத்தில் சிஎஸ்கே அணி மிகவும் உற்சாகமாக செயல்படுகிறது. அணியின் மூத்த வீரர்கள் தோனி மற்றும் ரகானே வரை பீல்டிங்கில் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள். இது அணியில் இருக்கும் இளம் வீரர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமடைய வைக்கிறது. இதன் காரணமாக அவர்கள் பந்துவீச்சின் போது 20 ஓவர்களும் களத்தில் பம்பரமாக சொல்கிறார்கள். இப்படியான செயல்பாடு எதிரணியை மனதில் தாக்கத்தை ஏற்படுத்த செய்கிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டி குறித்து பேசி உள்ள சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி “இந்த போட்டிக்கான எனது கணிப்பு என்னவென்றால், கடைசி ஓவரின் போது தோனி பேட்டிங் செய்வார். மக்கள் கூட்டம் அலைமோதும். அவர் வழக்கம்போல் போட்டியை முடித்து வைப்பதற்கு சிக்சர் அடிப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : எங்கப்பா இந்த 3 பேர டிவியில காட்டினார்.. எனக்கு ஃபாஸ்ட் பவுலர் ஆகற வெறி வந்தது இப்படித்தான் – மயங்க் யாதவ் பேட்டி

இதுகுறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறும்பொழுது ” நான் எதை பார்க்க விரும்புகிறேன் என்றால் இன்றைய போட்டியின் கடைசி ஓவர் ரிஷப் பண்ட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். ரிஷப் பண்ட் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்பதுதான் மைதானத்தில் உள்ள பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் இது சிஎஸ்கே அணியின் விருப்பத்திற்கு நேர் எதிரானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.