நான் பதிரனாவுக்கு பந்து வீச்சு பயிற்சி அளிக்க மாட்டேன்.. இதுதான் காரணம் – பிராவோ பேட்டி

0
322
Bravo

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக இருந்து தற்போது அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக டிவைன் பிராவோ மாறி இருக்கிறார். இவர் விளையாடிய காலத்தில் புத்திசாலித்தனமாக பந்து வீசுவதில் திறமையானவராக இருந்தார். தற்பொழுது தன் அணியின் பந்துவீச்சாளர்களையும் அப்படியே வழி நடத்துகிறார். ஐபிஎல் தொடரில் தன் அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

தற்போது சிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சுக்கு நட்சத்திர வீரராக இலங்கை அணியின் இளம் வீரர் மதிஷா பதிரனா இருக்கிறார். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பொழுது இவர் மொத்தம் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான சிஎஸ்கே அணி மும்பை அணிக்கு எதிராக மோதிய போட்டியில், முக்கிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். ஸ்லிங் வகை வந்து வீச்சு ஆக்சனை கொண்டு இருப்பதால் டி20 கிரிக்கெட்டில் இவருடைய முக்கியத்துவம் மிக அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து டிவைன் பிராவோ பேசும்பொழுது “பதிரனா மிகவும் விசேஷமானவர். நான் அவரை பேபி மலிங்கா என்றுதான் அழைப்பேன். அதே சமயத்தில் பேபி கோட் என்றும் அழைப்பேன். அவர் இயற்கையிலேயே திறமையாக பந்து வீசும் திறனை பெற்றிருக்கிறார். எனவே அவருக்கு பந்து வீசும் பயிற்சியை அளிக்க நாம் முயற்சி செய்யக் கூடாது.

முஸ்தாஃபிசூர் மிகவும் சிறப்பானவர். அவருக்கென தனித்துவமான பந்துவீச்சு ஆக்சன் இருக்கிறது. உலகில் சிறந்த மெதுவான பந்து ஒன்றை அவர் வைத்திருக்கிறார். இப்படியானவருக்கு நாம் சுதந்திரத்தை கொடுத்தால் போதுமானது. மேலும் துஷார்தேஷ் பாண்டே கடந்த இரண்டு சீசங்களாக என்னை கவர்ந்தவராக இருந்து வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இம்பேக்ட் பிளேயர் ரூல் தேவையில்லாதது.. நான் ஐபிஎல் மேட்ச்சே பாக்கிறது இல்ல – அக்சர் படேல் பேட்டி

டி20 கிரிக்கெட் வடிவத்தில் தற்பொழுது பந்துவீச்சாளர்கள் தடுமாறுவதற்கு மிக முக்கிய காரணம், அவர்கள் தங்களின் யார்க்கர் திறமையை நம்புவதில்லை. நான் ஒவ்வொரு பயிற்சி அமர்விலும் எங்களது பந்துவீச்சாளர்களை 12 முதல் 14 யார்க்கர் பந்துகளை வீச வைக்கிறேன். அப்பொழுதுதான் ஆட்டத்தில் அதை செயல்படுத்த முடியும். டி20 கிரிக்கெட் வடிவத்தில் யார்க்கர் இல்லாமல் நீடிக்க முடியாது. வெற்றி பெற்ற பும்ரா மற்றும் மலிங்கா போன்றவர்கள் இதனால்தான் வெற்றி பெற்றார்கள். நாங்கள் அதையே முயற்சி செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.