இம்பேக்ட் பிளேயர் ரூல் தேவையில்லாதது.. நான் ஐபிஎல் மேட்ச்சே பாக்கிறது இல்ல – அக்சர் படேல் பேட்டி

0
74
Axar

ஐபிஎல் நிர்வாகம் ஐபிஎல் தொடரை சுவாரசியப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதியை கொண்டு வந்தது. இந்த விதிக்காக இரண்டு பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கவும் இன்னொரு புதிய விதியையும் கொண்டு வந்தது. தற்பொழுது இந்த விதிக்கான ஆதரவு வீரர்களிடையே குறைந்து வருகிறது. இதுகுறித்து அக்சர் படேல் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இம்பேக்ட் பிளேயர் விதியால் ஐபிஎல் தொடரில் போட்டித் தன்மை அதிகரிக்கும் என ஐபிஎல் நிர்வாகம் கருதியது. மேலும் இம்பேக்ட் பிளேயரை சரியாக பயன்படுத்திக் கொள்ள, இரண்டு பிளேயிங் லெவன்களை அணிகள் கொடுக்கும் இன்னொரு புது விதிமுறையும் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் டாஸ் எப்படி செல்கிறதோ அதற்கு ஏற்ற அணியை வைத்து விளையாடிக் கொள்ளலாம். இதனால் வெற்றி தோல்வியில் டாஸ் வகிக்கும் பங்கு குறைக்கப்படும் என்று கருதப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்பொழுது பேட்டிங் வரிசை இம்பேக்ட் பிளேயரால் நீளமாகி விடுவதால், எல்லா அணிகளும் முதல் பந்தில் இருந்தே அடிக்கின்றன. இது கடைசியாக பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உண்டாக்குகிறது. மேலும் ஆடுகளங்களும் பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பதால் பந்துவீச்சாளர்கள் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். ஒரு வீரர் கூடுதலாக கிடைப்பதால் ஆல்ரவுண்டர்களுக்கான மதிப்பும் குறைந்துவிட்டது. எனவே இந்த விதி அவசியமற்றது என இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து அக்சர் படேல் கூறும் பொழுது “நான் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு பெரிய ரசிகன் கிடையாது. அணிகள் தங்களுக்கு தேவையான பேட்ஸ்மேன்கள் அல்லது பந்துவீச்சாளர்களை இந்த விதியின் மூலம் பயன்படுத்துகின்றன. ஆனால் எந்த அணிகளும் இந்த விதியின் கீழ் ஆல் ரவுண்டர்களை பயன்படுத்துவது கிடையாது.

இந்த விதியை உருவாக்கியவர்கள், போட்டியை பேட்டிங் தீர்மானிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் இதை வெளிப்படையாக பந்துவீச்சாளர்களுக்கு கடினமானதாக மாறிவிட்டது. மேலும் அழுத்தம் இருக்கிறது இதிலிருந்து சிறப்பாக செயல்படவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் சாதாரண ஆள் கிடையாது.. அவர் எங்களுக்கு நிறைய ஏற்படுத்தி தந்திருக்காரு – சந்தீப் சர்மா பேட்டி

இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக உங்களுக்கு கூடுதலாக ஒரு வீரர் கிடைக்கிறார். பெரும்பாலும் பேட்ஸ்மேனைதான் பயன்படுத்துகிறார்கள். எனவே எல்லா அணிகளும் முதல் பந்தியில் இருந்து அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.கூடுதல் வீரர் இருப்பதால் அச்சம் இருப்பதில்லை. மேலும் ஐபிஎல் தொடரில் நிறைய போட்டிகள் நடப்பதால் நான் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. இறுதியாக ஸ்கோர் கார்டு மட்டுமே பார்ப்பேன்” என்று கூறியிருக்கிறார்.