ருதுராஜ் ஒரு ஏழைக் குழந்தை.. ஆனால் முதல் வலைப்பயிற்சியில் நான் அவரிடம் அதை பார்த்தேன் – மைக் ஹசி பேட்டி

0
19
Ruturaj

2024ஆம் ஆண்டு 17வது ஐபிஎல் சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் இந்த மூன்று வெற்றிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வந்திருக்கின்றன. பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி ருதுராஜ் பற்றிய சிஎஸ்கேவில் ஆரம்ப காலகட்ட நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள, புதிய கேப்டனாக ருதுராஜ் வந்தார். தற்பொழுது வெளியில் விளையாடிய இரண்டு போட்டிகளில் தோற்று, சொந்த மைதானத்தில் விளையாடிய மூன்று போட்டிகளில் வென்று சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் தொடர்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் ஆரம்ப காலகட்டத்தில் ருதுராஜ் உள்ளே வந்த பொழுது வழக்கமான இளம் வீரர்கள் போல் பெஞ்சில் இருந்தார். 2020 ஆம் ஆண்டு விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர், அந்த ஆண்டு துவக்க வீரராக மூன்று போட்டிகளில் தொடர்ந்து மூன்று அரை சதங்கள் அடித்து இருந்தார். இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிக ரன்கள் குவித்து முக்கிய காரணமாக இருந்தார். தற்பொழுது அணியின் கேப்டனாகவும் உயர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறும்பொழுது “எங்கள் அணியில் ருதுராஜ் போன்ற ஒரு வீரரை நான் விரும்புகிறேன். அவர் மிகவும் இளமையாக ஒல்லியாக அணிக்கு வந்த பொழுது நான் அவரை பார்த்திருக்கிறேன். அப்பொழுது ஒரு ஐபிஎல் சீசனில் அவருக்கு கோவிட் வந்தது என்பது எனக்கு நினைவு இருக்கிறது. அப்பொழுது 32 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவர் தொடர்ந்து கோவிட் பரிசோதனை செய்து கொண்டே இருந்தார்.

மேலும் அவர் ஒரு ஏழைச் சிறுவன். பிறகு அவர் வெளியே வந்தார். அப்போது நான் அவரை முதல் பயிற்சி அமர்வில் பார்த்தேன். அப்போதே நான் இந்த இளைஞரிடம் ஏதோ விசேஷம் இருப்பதாக உணர்ந்து கூறினேன்.

- Advertisement -

இதையும் படிங்க : என்ன இப்ப கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா?.. இது நடக்கிற வரை கிடையாது – ரோகித் சர்மா திட்டவட்ட பதில்

பிறகு ஓரிரு ஆட்டங்கள் விளையாடி பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் அவரிடம் சிறப்பு திறமை இருப்பதாக எனக்கு தெரியும். பின்பு அவருடைய வழியில் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். கடந்த ஐபிஎல் சீசன்களில் நாம் அவரிடம் என்ன பார்த்தோம் என்று தெரியும்” என்று கூறி இருக்கிறார்.