என்ன இப்ப கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா?.. இது நடக்கிற வரை கிடையாது – ரோகித் சர்மா திட்டவட்ட பதில்

0
180
Rohit

இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து உலகக் கோப்பையை இழந்தது. இதற்குப் பிறகு ரோகித் சர்மா எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்பது குறித்து அவரே தெளிவான பதில் தந்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மொத்தம் 597 ரன்கள் குவித்தார். தற்பொழுது இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து வருவதோடு, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தவும் இருக்கிறார். இந்த இரண்டு வடிவங்களிலும் உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் தற்போது அவருக்கு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஓய்வு குறித்து பேசி இருக்கும் ரோகித் சர்மா கூறும் பொழுது “ஓய்வு பெறுவதைப் பற்றி நான் உண்மையில் யோசிக்கவில்லை. ஆனால் வாழ்க்கை இங்கு அழைத்துச் செல்கிறது என்பது குறித்து தெரியவில்லை. நான் தற்பொழுது நன்றாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். எனவே சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவதை தொடர போகிறேன். நான் இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்ல விரும்புகிறேன். 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இருக்கிறது. இந்தியா சாதிக்கும் என நம்புகிறேன்.

எனக்கு 50 ஓவர் உலகக் கோப்பைதான் உண்மையான உலகக் கோப்பை. ஏனென்றால் நான் அந்த வடிவ கிரிக்கெட் போட்டிகளை பார்த்து வளர்ந்தவன். அதைவிட முக்கியமாக உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. வீட்டு கூட்டத்தின் முன்னால் எங்களால் அந்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நம்பினேன்.

அந்த உலகக் கோப்பையில் நாங்கள் தோல்வி அடைவதற்கு எது காரணமாக இருந்தது என்றே தெரியவில்லை. ஏனென்றால் எல்லா பெட்டிகளையும் டிக் செய்து இருந்தோம். நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் என்று நினைத்தேன். எங்களால் உலகக் கோப்பையை கைப்பற்ற முடியும் என்று நம்பினேன்.

- Advertisement -

இதையும் படிங்க : நல்லவேளை நான் ரிட்டையர்ட் ஆகிட்டேன்.. சூரியகுமார் மனுஷன் மாதிரி ஆடினா பரவால்ல – ஹர்பஜன் சிங் பேட்டி

நம் எல்லோருக்கும் ஒரு மோசமான நாள் இருக்கும். எங்களுக்கு அந்த நாள் மோசமான நாளாக அமைந்தது. ஆனால் அந்த நாளில் நாங்கள் மோசமான கிரிக்கெட்டை விளையாடவில்லை. ஆனால் சில விஷயங்கள் எங்கள் வழியில் செல்லவில்லை. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.