கிரிக்கெட் தொகுப்பாளர்களை மணந்து கொண்ட 6 கிரிக்கெட் வீரர்கள்

0
294
cricketers who married cricket presenters

கிரிக்கெட் போட்டி என்பது உலக அளவில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதனுடைய தாக்கம் நாளுக்கு நாள் மிக அதிக அளவில் வளர்ந்து கொண்டு  இருக்கிறது. கபில்தேவ், கவாஸ்கர் தொடங்கி சச்சின், கங்குலி என வளர்ந்து தற்பொழுது தோனி, ரோகித், கோலி என இந்திய அணி உருமாறியுள்ளது. நாளை ஒரு ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா என நம்பிக்கை தரும் அளவுக்கு இந்திய அணி வளர்ந்து கொண்டே செல்கிறது.

இந்திய கிரிக்கெட் முன்னரை விட அதிக அளவில் வளர்வதற்கு உள்ளூர் ஆட்டங்களான ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டாக் அலி தொடர் மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டி தொடர் இந்திய அணியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி உள்ளது.

- Advertisement -

 இந்திய அணி மற்றும் நன்றி உலகில் மற்ற அணிகள் ஆன ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான், ஸ்ரீலங்கா போன்ற அணிகளும் நாளுக்கு நாள் தங்களை முன்னேற்றிக் கொண்டு செல்கின்றனர்.

கிரிக்கெட் போட்டி நன்றாக நடக்க வேண்டும் என்றால் அந்த போட்டியில் ரசிக்கும் அளவுக்கு பேசக்கூடிய வர்ணனையாளர்கள் அந்தப் போட்டியை சிறப்பாக தொகுத்து வழங்க தொகுப்பாளரும் இருக்க வேண்டும். அப்படி கிரிக்கெட் மூலம் காதல் ஏற்பட்டு கிரிக்கெட் தொகுப்பாளர்களை மணந்து கொண்ட கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம் 

ஜஸ்பிரித் பும்ரா சஞ்சனா கணேசன்

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ரா ஒரு நடிகையை காதலித்து வருகிறார் என்ற வதந்தி பல காலமாக பரவி வந்தது. ஆனால் அதற்குப் பின்னர் அந்த நடிகையின் தாயார் இது எல்லாம் வதந்தி தான் என அதிரடியாக தெரிவித்தார். அதன் பின்னர் எந்த விதமான வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவவில்லை.

ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு மேல் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தொகுப்பாளரான சஞ்சனா கணேசனை திருமணம் செய்யவுள்ளார் என மிகப்பெரிய அளவில் வதந்திகள் வெளிவந்தன. இதுவும் முன்னரைப் போல வதந்தியாக தான் இருக்கும் என்று எல்லோரும் நினைத்த வேளையில், அது உண்மை என தெரிய வந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் சஞ்சனா கணேசனை ஜஸ்பிரித் பும்ரா கடந்த மார்ச் மாதம் கரம்பிடித்தார். கரம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் திருமணம் நடந்த புகைப்படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார். யாருக்கும் தெரியாமல் நடந்தேறிய இந்த காதல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

பென் கட்டிங் மற்றும் எரின் ஹோலந்து

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் பெண் கட்டிங் 2016ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் கொடுத்த பங்களிப்பை யாரும் மறந்து விட முடியாது. கடைசியாக வந்து பேட்டிங்கில் அதிரடி காட்டிய பெண் கட்டிங் அதேபோல் பௌலிங்கிலிம் முக்கியமான விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொகுப்பாளரும், மிஸ் வேர்ல்ட் ஆஸ்திரேலியா பட்டத்தை வென்ற மாடலுமான ஹோலந்தை காதலித்து கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்டூவர்ட் பின்னி மற்றும் மயாண்டி லேங்கர்

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னி ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த பந்து வீச்சை தன் வசம் வைத்துள்ளார். பங்களாதேஷிற்கு எதிரான ஒரு போட்டியில் 4.4 ஓவர்களில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு தான் இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் தற்போது வரை இருந்து வருகிறது.

இவர் கிரிக்கெட் தொகுப்பாளரான மாயன்டியை காதலித்து கரம் பிடித்தார். மாயாண்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர்கள் மிக அனுபவமும் திறமையும் வாய்ந்த தொகுப்பாளர் ஆவார். பல ஆண்டுகளாக மிக சிறப்பாக போட்டிகளை தொகுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்டின் குப்டில் மற்றும் லாரா மெக்கோல்ட்ரிக்

நியூசிலாந்தைச் சேர்ந்த ஓபனிங் வீரரான மார்டின் குப்டில் டி20 போட்டிகளில் பொறுத்தவரையில் மிகச்சிறந்த வீரர் என்பது அனைவரும் அறிவர். 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் காலகட்டத்தில் இவர் அடித்த 200 ரன்களும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. ஐபிஎல் போட்டிகளிலும் பஞ்சாப் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடி உள்ளவர். இவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலின் தொகுப்பாளரான லாரா மெக் கோல்ட்ரிக்கை காதலித்து கரம் பிடித்தார்.

மோர்னே மோர்க்கல் மற்றும் ராஸ் கெல்லி

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் ஐபிஎல் தொடரில் கூட சென்னை அணிக்காக மிக சிறப்பாக விளையாடியவர். சென்னை அணிக்காக ஒரு தொடரில் மிக அதிகமான விக்கட்டுக்களையும் கைப்பற்றி அந்த ஆண்டிற்கான பர்ப்பிள் கேப்பையும் கைப்பற்றினார்.

இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராஸ் கெல்லியை காதலித்து வந்தார். ராஸ் சேனல் 9 இல் நீண்ட காலம் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர். அவரை காதலித்து அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டார் மோர்னே மோர்க்கல். இப்பொழுது தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கேயே தங்கி விட முடிவு செய்துள்ளார்.

ஷேன் வாட்சன் மற்றும் லீ பர்லாங்

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் பல ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணிக்கு விட மிகச் சிறப்பான வகையில் பங்காற்றியவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். ஐபிஎல் தொடரில் கூட சமீப காலத்தில் சென்னை அணிக்காக மிக சிறப்பாக விளையாடியவர். தற்பொழுது அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொகுப்பாளரான லீ பர்லாங்கை காதலித்து கரம் பிடித்து உள்ளார். தற்பொழுது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.