2008 ஐபிஎல் தொடரில் விளையாடிய அணிகளின் கேப்டன்கள் தற்போது இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்

0
220
Mahendra Singh Dhoni and Sourav Ganguly

ஐபிஎல் லீக் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று தொடங்க ஆரம்பித்த அந்த தொடர் தற்போது வரை வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. உலக கிரிக்கெட் லீக் வரலாற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் மிகவும்  பிரபலமான லீக் தொடர் என்றால் அது ஐபிஎல் லீக் தொடர் தான்.

இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் பந்து விளையாட எப்பொழுதும் ஆர்வம் காட்டுவார்கள். அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகமே வீரர்களை இந்த ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிப்பது என்பது சிறப்பம்சமாகும். அப்பேர்பட்ட ஐபிஎல் லீக் தொடரின் முதலாவது தொடரில் பங்கேற்ற ஒவ்வொரு அணிகளின் கேப்டன்கள் தற்பொழுது என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று பார்ப்போம்.

- Advertisement -

விவிஎஸ் லக்ஷ்மன் டெக்கான் சார்ஜர்ஸ்

 டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கேப்டனாக விவிஎஸ் லக்ஷ்மன் களமிறங்கினார். டெக்கான் சார்ஜர்ஸ் அணியை தலைமை தாங்கிய விவிஎஸ் லக்ஷ்மன் அவ்வளவு சிறப்பாக அணியை வழிநடத்திச் செல்ல வில்லை. அதன் காரணமாக அந்த அணி அந்த ஆண்டு கடைசி இடத்தில் தனது தொடரை முடித்துக் கொண்டது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே அந்த அணையை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆனால் கில்கிறிஸ்ட் தலைமை தாங்கினார். தலைமை தாங்கி அந்த அணிக்கு கோப்பையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்கான் சார்ஜஸ் அணையிலிருந்து கொச்சி டஸ்கஸ் கேரளா அணைக்காக விவிஎஸ் லக்ஷ்மன் சிறிது காலம் விளையாடி அதன் பின்னர் ஓய்வு பெற்றுக்கொண்டார். தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகவும், தான் விளையாடிய ஹைதராபாத் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தற்பொழுது உள்ளார்.

- Advertisement -

ஷேன் வார்னே – ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே அந்த அணியில் யூசுப் பதான் மற்றும் ஷேன் வாட்சன்  போன்ற மிகப் பெரிய அதிரடி வீரர்கள் இருந்த வேளையிலும் ஆரம்பத்தில் அந்த அணி தொடரில் சறுக்கியது. இருந்த போதும் இறுதியில் மிகப்பெரிய அளவில் அதிரடியாக விளையாடி அந்த தொடரை கைப்பற்றி ஐபிஎல் வரலாற்றில் முதல் தொடரை கைப்பற்றிய சிறப்பம்சம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு போய்ச் சேர்ந்தது.

ஐபிஎல் லீக் தொடரை வென்ற முதல் கேப்டன் ஷேன் வார்னே ஆவார். விவிஎஸ் லக்ஷ்மன் போலவே தற்பொழுது ஷேன் வார்னே தற்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் டிராவிட் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இந்திய கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் தலைமை தாங்கினார்.  விராட் கோலி, அனில் கும்ப்ளே, ஜாக்ஸ் காலிஸ்,ராஸ் டைலர், பிரவீன்குமார் போன்ற அதிரடியான வீரர்களை கொண்ட அந்த அணி  அந்த ஆண்டு தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பங்களிக்கவில்லை.மிக மோசமான தொடராகவே அந்த அணிக்கு அது அமைந்தது. அந்த ஆண்டு அந்த அணி 7-வது இடத்தில் தனது தொடரை முடித்துக் கொண்டது.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து அதன் பின்னர்தான் ராயல்ஸ் அணிக்காக சிறிது காலம் ராகுல் டிராவிட் விளையாடினார் அதன் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க பட்டார். தற்பொழுது அவர் இந்திய அணியின் தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

சௌரவ் கங்குலி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

ரிக்கி பாண்டிங், பிரண்டன் மெக்கல்லும், கிறிஸ் கெய்ல், டேவிட் ஹச, இஷாந்த் ஷர்மா என அதிரடியான வீரர்களைக் கொண்டு அந்த அணி களமிறங்கியது. அந்த அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தலைமை தாங்கினார். அந்த அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாட தொடங்கியது கண்டிப்பாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த அணி அதிர்ச்சி தரும் விதமாக தொடரிலேயே வெளியேறியது.

தற்பொழுது சௌரவ் கங்குலி பிசிசிஐ கிரிக்கெட் கட்டமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ்

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த ஆண்டு தொடரை மிக அற்புதமாக விளையாடியது. நட்சத்திர வீரர்கள் மேத்யூ ஹைடன், மைக்கேல் ஹசி முத்தையா முரளிதரன் போன்ற திறமை வாய்ந்த வீரர்களை வைத்து அந்த அணி தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியது. இருந்த போதிலும் இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வி பெற்று ரன்னர் அப் பட்டத்தை வென்றது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மகேந்திர சிங் தோனி தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து கொண்டிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் – மும்பை இந்தியன்ஸ் 

மும்பை இந்தியன்ஸ் அணியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்கினார். ஜெயசூர்யா, லசித் மலிங்கா, ஹர்பஜன் சிங், ரஹானே, ஜாகிர் கான் என நட்சத்திரப் பட்டாளத்துடன் களமிறங்கிய மும்பை அணி அந்த ஆண்டு ஒரு சில போட்டிகளில் நன்றாக விளையாடினாலும் ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. அதற்கு காரணம் சச்சின் டெண்டுல்கர் ஒரு சில போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக அந்த ஆண்டு ஐந்தாவது இடத்தில் அந்த அணி தனது தொடரை முடித்துக் கொண்டது.

2010 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்து சச்சின் டெண்டுல்கர் ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார். அதன் பின்னர் இறுதியாக 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். தற்போது சில கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பு கிரிக்கெட் வர்ணனையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

யுவராஜ் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப்

சங்கக்காரா, ஜெயவர்த்தனே, ஷான் மார்ஷ், பிரட்லி, பியூஸ் சாவ்லா என அதிரடி வீரர்களாக பஞ்சாப் அணியில் அப்போது நிறைந்து இருந்தார்கள். அந்த அணியை இந்திய வீரர் யுவராஜ் சிங் தலைமை தாங்கினார். அரையிறுதிப் போட்டி வரை முன்னேறிய பஞ்சாப் அணி சென்னை அணியிடம் அதனுடைய அரையிறுதி போட்டியில் தோல்வி பெற்றது. அந்த தொடரில் மிக அதிக ரன்களை குவித்த ஷான் மார்ஷ் ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார்.

யுவராஜ் சிங் அதற்குப் பிறகு புனே வாரியர்ஸ் இந்தியா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவர் அனைத்துவித போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

விரிந்த ஷேவாக் – டெல்லி டேர்டெவில்ஸ் 

ஏபி டிவிலியர்ஸ், ஷோயப் மாலிக், கௌதம் கம்பீர் என அதிரடி பேட்ஸ்மேன்களில் கொண்ட அணியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளங்கியது. அந்த அணியை இந்திய அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் தலைமை தாங்கினார். தொடர் முழுவதும் நன்றாக விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி அரையிறுதிப் போட்டியில் தனது இறுதிப் போட்டி வாய்ப்பை ராஜஸ்தான் அணியிடம் பறிகொடுத்தது.

ஷேவாக் அதன் பின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக ஒரு சில தொடர்களில் பங்காற்றினார். தற்பொழுது ஒரு சில போட்டிகளில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் ஊக்கமருந்து எதிர்ப்பு மேல்முறையீட்டு குழுவில் ஒரு முக்கிய மெம்பராக தற்போது அவர் உள்ளார்.