பெரிய வீரர்கள் இருந்தாலும் உலக கோப்பையை ஜெயிக்க முடியாது.. டிராவிட் இத செய்யணும் – பிரையன் லாரா கருத்து

0
95
Lara

இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வெல்ல இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இறுதியாக 2011ம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதற்கு பிறகு எந்த வடிவத்திலும் உலகக்கோப்பையை வெல்லவில்லை. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என பிரையன் லாரா கூறி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் சில காலமாகவே மிகவும் ஆரோக்கியமாக இருந்து வருகிறது. வெளி மண்ணிலும் சென்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மட்டும் அல்லாமல் தொடரையும் கைப்பற்ற கூடிய அளவுக்கு மாறி இருக்கிறது. மேலும் நிறைய இளம் திறமைகள் இந்திய கிரிக்கெட்டில் உருவாகி வருகிறார்கள்.

- Advertisement -

இப்படி ஆரோக்கியமான சூழ்நிலை காணப்பட்டாலும் கூட இந்திய அணியால் உலகக் கோப்பையை வெல்ல மட்டும் முடியவில்லை. லீக் சுற்றில் பிரமாதமாக விளையாடும் இந்திய அணி நாக் அவுட் போட்டிகளில் தோற்றுவிடுகிறது. அதைத் தாண்டினாலும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து விடுகிறது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் பிரையன் லாரா கூறும்பொழுது “எந்த வடிவமாக இருந்தாலும் முந்தைய உலகக் கோப்பைகளில் இந்திய அணியை பார்க்கும் பொழுது, அவர்கள் எப்படி கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்பதற்கான இறுதித் திட்டத்தில் குறைபாடு இருப்பதாக நான் நினைக்கிறேன். அணியில் எத்தனை சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருந்தாலும், நீங்கள் எப்படி இருக்கப் போகிறீர்கள்? எப்படி இன்னிங்ஸை கட்டமைக்க போகிறீர்கள்? என்பதுதான் முக்கியம்.

தற்போது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு விஷயத்தை ராகுல் டிராவிட் செய்ய வேண்டும். ராகுல் டிராவிட் தனது அணி வீரர்களை ஒரு குறிப்பிட்ட திட்டத்தை நோக்கி முழுமையாக நகர்த்த வேண்டும். அவர் இதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணிக்கு இப்ப இருக்க பிரச்சனையே வேற.. நாங்க இதத்தான் சரி பண்ணனும் – ரோகித் சர்மா பேட்டி

இந்திய அணி நிறைய திறமையான வீரர்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் வெளியில் இருந்து 15 வீரர்களை தேர்வு செய்யலாம். அவர்களும் உலகக் கோப்பையை வெல்லக்கூடியவர்களாகவே தெரிவார்கள். இந்திய மணிக்கு நல்ல அனுபவமும் பேட் மற்றும் பந்துவீச்சில் நல்ல சமநிலையும் இருக்கிறது. கரீபியன் மற்றும் அமெரிக்க சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள அவர்கள் அணியில் எத்தனை சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். அதுவே அவர்களிடம் எவ்வளவு வீரர்கள் இருக்கிறது என்பதை காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.