இந்திய கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் தொடர் நிறைய வகையில் உதவி செய்திருக்கிறது.பல புதிய இளம் வீரர்களை அடையாளம் காண்பதற்கு ஐபிஎல் தொடர் அடித்தளமாக இருந்திருக்கிறது.
சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கும் அந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கு இளம் வீரர்களை கண்டறிவதற்கான ஒரு முக்கிய தளமாக விளங்கப் போகிறது. கடந்த இரண்டு வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் நடத்தப்படுகிறது. மேலும் ஐபிஎல் தொடருக்கு அடுத்த இரண்டாவது இடத்தை இந்த தொடர் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது போட்டியில் பவுமா காயம் அடைந்த காரணத்தினால் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் முதல் டெஸ்ட் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
இதற்கு முன்பாக நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக மிகச்சிறப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் செயல்பட்டும் இருந்தார். இதன் காரணமாக அவருக்கு தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடமும் கிடைத்தது.
மேலும் சவுத் ஆப்பிரிக்கா டி20 அணியில் அவருக்கான நிரந்தர இடத்தை அவர் பிடித்து இருக்கிறார். மேலும் அவர் ஒருநாள் அணிக்கும் எதிர்காலத்தில் வரக்கூடும். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த வருடத்தின் இறுதியில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரிஷப் பண்ட் கேப்டனாக இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வாரியார் அணிக்காக உள்நாட்டில் விளையாடி வரும் ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸ் டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரில் 372 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 302 ரன்கள் அடித்து சாதித்திருக்கிறார். மொத்தம் எட்டு மணி நேரம் 19 நிமிடங்கள் களத்தில் இருந்திருக்கிறார். வேகமாக அடிக்கப்பட்ட முச்சதமாக இது அவருக்கு பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பெண்கள் ஐபிஎல்.. கடைசி பந்தில் சிக்ஸர்.. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டெல்லியை வீழ்த்தியது
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் மீண்டும் பழைய நிலைக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் அவர்கள் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று உலகக் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.