இந்திய கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் ஹீரோ.. பிரத்விஷா ஜீரோவாக காரணமே இந்த ஒரு விஷயம்தான் – சிறு வயது கோச் பேட்டி

இந்திய அணிக்காக அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து நட்சத்திரமாக ஜொலித்தவர் பிரித்விஷா மற்றும் தற்போதைய இந்திய அணியில் அறிமுகமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ஜெய்ஸ்வால். தற்போது இந்த இருவரின் வாழ்க்கை வெவ்வேறு கட்டத்திற்கு சென்றுள்ளது.

- Advertisement -

ஒருவரது கிரிக்கெட் வாழ்க்கை மேல் நோக்கியும் மற்றொருவரது கிரிக்கெட் வாழ்க்கையை கீழ்நோக்கையும் சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் இருவருக்கும் பயிற்சி அளித்த ஜுவாலா சிங் இதுகுறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

ஜெய்ஸ்வால் மற்றும் பிரத்விஷா

இந்திய இளம் வீரரான பிரித்விஷா 2018ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இருப்பினும் 2021ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் இந்திய அணிக்காக மோசமான பார்ம் காரணமாக விளையாடவில்லை. அது மட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் ஓரம் கட்டப்பட்டவர் தற்போது உள்நாட்டு அணியான மும்பை அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மற்றொரு இளம் வீரரான ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதோடு சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்திருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படுத்தி வரும் நிலையில் இவர்கள் இருவருக்குமான வேறுபாடு குறித்து பயிற்சி அளித்த ஜுவாலா சிங் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஒரு விஷயம்தான் காரணம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பிரித்விஷா 2015ஆம் ஆண்டு முதல் என்னுடன் மூன்று வருடங்கள் இருந்தார். அப்போது அவர் அண்டர் 16 போட்டியில் விளையாடவில்லை. அவரது தந்தை என்னை வழிநடத்தச் சொன்னார். அடுத்த ஆண்டிலேயே அவர் அண்டர் 19 வயதுக்குட்பட்ட கூச் பெஹார் ட்ராபியில் விளையாடினார் மற்றும் தேர்வு போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். நான் அவருக்காக கடினமாக உழைத்தேன் ஆனால் அவர் நிறைய பேரிடம் பணியாற்றி இருப்பதால் அதற்கான கிரெடிட் நான் மட்டுமே எடுத்துக் கொள்ள மாட்டேன்.

இதையும் படிங்க:நாளை U19 ஆசிய கோப்பை.. எந்த சேனலில் பார்க்கலாம்.. இந்திய அணியின் அட்டவணை.. முழு விபரம்

அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடிய போது மிகவும் உற்சாகமடைந்தேன். அப்போது அவர் என்னுடன் பிறந்த நாளை கொண்டாடினார். ஆனால் 2017க்கு பிறகு அவரை பார்க்கவில்லை. மற்றொரு வீரரான ஜெய்ஸ்வால் தொடக்கத்தில் இருந்தே உடல் தகுதி மற்றும் மனதிடத்திற்காக கடுமையாக உழைத்தார். சச்சின் பாய் கூட அவரது ஆட்டத்தை செம்மைப்படுத்தினார். என்னை பொருத்தவரை ஒரு வீரர் அவரது செயல்பாட்டில் இருந்து விலகிச் சென்றால் மட்டுமே தடம் புரளுவதாக உணர்கிறேன். ஜெயிஸ்வால் அவரது செயல்பாட்டில் நன்றாக உள்ளார். அதனால்தான் அவர் தற்போது சிறந்து விளங்குகிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts