19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்டில் வருகிற 29ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணியோடு சேர்த்து எட்டு அணிகள் பங்கு பெறுகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மற்றும் இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
19 வயதுக்குட்பட்டோருக்கான அண்டர் 19 ஆசிய கோப்பை வருகிற 29ஆம் தேதி முதல் துபாயில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற இருக்கிறது. இதில் எட்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இந்த தொடரில் வெற்றிகரமான அணியாக உள்ளது. முகமது ஆமான் தலைமையில் பங்கு பெற உள்ள இந்திய அணியில் ஆயுஷ் மத்ரே, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய பிரபலமான வீரர்கள் பங்கு பெற இருக்கிறார்கள்.
இதில் வைபவ் சூர்யவன்ஷி 13 வயதே ஆகும் நிலையில் தற்போது நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடைபெற உள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் இந்திய அணி வரும் சனிக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது போட்டியை தொடங்க உள்ளது.
இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்
அதற்குப் பிறகு டிசம்பர் இரண்டாம் தேதி சார்ஜாவில் ஜப்பான் அணிக்கு எதிராகவும், அதற்குப் பிறகு 4ம் தேதி எமிரேட்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. 29ஆம் தேதி தொடங்க உள்ள போட்டிகள் முடிவடைந்து டிசம்பர் ஆறாம் தேதி அரை இறுதிப் போட்டிகள் மற்றும் டிசம்பர் 8ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும். இந்த போட்டிகல் அனைத்தும் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி 10.30 மணிக்கு (உள்ளூர் நேரம் 9.00) நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:பிசிசிஐனால கிரிக்கெட்டுக்கே ஆபத்து.. ஐசிசி நேர்மையாய் இருக்க இதை செஞ்சே ஆகணும் – பாக் அப்ரிடி கருத்து
இந்தப் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சோனி லைவ் மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தத் தொடரில் எப்போதுமே சிறப்பாக செயல்படும் இந்திய அணி இந்த முறையும் கோப்பையை கைப்பற்றுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது






