வயசு ஆகுறப்போதான் உழைக்கணும்னு வெறி வரும்.. வாய்ப்பு கொடுங்க நான் தயாராக இருக்கேன் – இந்திய வீரர் பேட்டி

0
121

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் டெஸ்ட் தொடர் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொள்வேன் என இந்திய கிரிக்கெட் வீரர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக டெஸ்ட் தொடரில் எதிர்பாராத தோல்விகளை சந்தித்து வருகிறது. சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட இந்திய அணி அதற்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையை ஆஸ்திரேலியா அணியிடம் பறி கொடுத்தது.

முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து இந்திய அணி பெரிய ஏமாற்றத்தை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியில் நங்கூரமிட்டு விளையாடக்கூடிய சிறந்த டெஸ்ட் வீரர்கள் இல்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்திய டெஸ்ட் வீரரான சேட்டேஸ்வர் புஜாரா மீண்டும் வாய்ப்பு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அந்த வாய்ப்பை தான் கெட்டியாக பிடித்துக் கொள்வேன் என சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது “நான் உள்நாட்டு கிரிக்கெட் இப்போது விளையாடி வருகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது இரண்டு கைகளாலும் கெட்டியாக பிடித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். பசி இன்னும் அதிகமாகும் உங்களுக்கு வயதாகும் போது இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்கிற உத்வேகம் கிடைக்கும். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி பெறுவது குறித்து நீங்கள் கேட்கிறீர்கள்.

இதையும் படிங்க:நியூசி அணி பற்றி அந்த ஆஸி வீரர் சொன்ன ரகசியம்.. இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கு – இங்கி நாசர் ஹுசைன்

நமது அணியில் சிறந்த பந்து வீச்சு வரிசை உள்ளது. ரன்கள் குவிக்க வேண்டும் அதைச் செய்ய சிறந்த வீரர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். பந்து வீச்சு மற்றும் சூழ்நிலைகளை நாம் மதிக்க வேண்டும். எனவே நமக்கு வாய்ப்பு இல்லை என்று நான் கூற மாட்டேன்” என்று புஜாரா பேசியிருக்கிறார். இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி முடித்த பிறகு அடுத்ததாக ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -