முன்னாடி நடந்த இந்த தவறை.. இனி இந்திய வீரர்களுக்கு நடக்காமல் பார்த்துக் கொள்வோம் – பிசிசிஐ அதிகாரி எடுத்த முக்கிய முடிவு

0
1

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடுவதால் வேலைப்பளு மற்றும் காயம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், பிசிசிஐ முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. எதிர்கால சுற்றுப்பயண அட்டவணையில் வீரர்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்லும் தொடர்களுக்கு இடையே போதுமான இடைவெளி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. முக்கிய தொடர்களுக்கு முன்பாக பயிற்சி மற்றும் சூழலுக்கு ஏற்ப தயாராகும் போட்டிகளுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறும்போது “வீரர்களின் வேலைப்பளுவை கருத்தில் கொண்டு, எதிர்கால போட்டி அட்டவணையை சிறப்பாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற வகையில் உறுதியளித்துள்ளார். இனி இந்திய வீரர்களின் காயங்களை குறைத்து, பெரிய தொடர்களில் சிறந்த அணியை களமிறக்க இந்த முடிவு உதவுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் காரணமாக பெரிய தொடர்களின் போது இந்திய வீரர்கள் காயம் ஏற்படாமல் இருக்க இது போன்ற நடவடிக்கைகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -