நியூசி அணி பற்றி அந்த ஆஸி வீரர் சொன்ன ரகசியம்.. இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கு – இங்கி நாசர் ஹுசைன்

0
217

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இறுதி போட்டியில் விளையாட உள்ள நியூசிலாந்து அணி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து இறுதிப் போட்டி

இந்தியா கிரிக்கெட் அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பொருத்தவரை வெற்றிகரமான அணியாக இருந்து வருகிறது. லீக் ஆட்டத்தில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியையும் வீழ்த்தி கம்பீரமாக இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல மற்றொரு எதிரணியான நியூசிலாந்து அணியும் இந்த தொடரில் கம்பீரமான அணியாக இருந்துள்ளது.

லீக் சுற்றில் நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக மட்டும் தோல்வியை தழுவிய நிலையில், அதற்குப் பிறகு நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பான வெற்றியை பதிவு செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் இந்திய அணிக்கு கடும் சவாலாக நியூசிலாந்து அணி இருக்கும் என்று சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவ்வளவு எளிதாக அந்த அணி விடாது

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு அவ்வளவு எளிதாக வெற்றியை கொடுக்காது. அவர்கள் தங்கள் வெற்றியை அவ்வளவு எளிதாக யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நான் மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் பேட்ஸ்மேன் ஆரோன் பின்ச் உடன் இரவு உணவு அருந்தி கொண்டிருந்தோம். அப்போது அவர் நியூசிலாந்து தங்களை தாங்களே வீழ்த்திக் கொள்ளும் அணி இல்லை என்று கூறினார்.

இதையும் படிங்க:இந்திய அணி செஞ்ச தவறை எல்லாம் கவனிச்சோம்.. அதனால இந்த முறை மிஸ் ஆகாது – நியூசி கேப்டன் சவால்

இதன் மூலமாக அவர் அதிரடியான ஆட்டத்தை நியூசிலாந்து அணி வெளிப்படுத்தும் மற்றும் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்கிற அர்த்தத்தில் கூறியிருக்கிறார். நியூசிலாந்து அணி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு தங்களை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு சில வீரர்கள் நியூசிலாந்து அணியில் இருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் எந்த ஒரு ஐசிசி தொடரிலும் அவர்கள் அரை இறுதி அல்லது இறுதிப் போட்டியில் நிச்சயமாக இருப்பார்கள். எனவே இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது” என்று நாசர் உசேன் கூறி இருக்கிறார்.

- Advertisement -