பீல்டிங் வராத கேப்டன் ரோகித் சர்மா.. காரணம் என்ன?.. பிசிசிஐ வெளியிட்ட கவலையான விஷயம்

0
430
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்பொழுது இறுதிக் கட்டத்தை எட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று என கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளாக அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது சமி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்திய அணி விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

மேலும் கடந்த வருடத்தில் இருந்து மூத்த வீரர்களான புஜாரா,ரகானே, உமேஷ் யாதவ் ஆகியோரை டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒதுக்கி வைத்தது. எனவே மீண்டும் இவர்களை வைத்து விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை.

இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இளம் வீரர்களை அனுப்பி கொண்டு வந்து, பெரிய அணிக்கு எதிராக பெரிய டெஸ்ட் தொடரை சந்திக்க வேண்டிய நெருக்கடி இருந்தது. இதிலிருந்து பின் வாங்காமல் தொடர்ச்சியாக இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டார்கள். இந்த தொடரில் மட்டும் மொத்தம் ஐந்து இளம் வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படியான கடினமான சூழ்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா திறமையாக அணியை வழிநடத்தி தொடரை வென்று சாதித்து இருக்கிறார். அதே சமயத்தில் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் இரண்டு சதங்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. மூன்றாவது நாள் போட்டியின் போது மைதானத்திற்கு பீல்டிங் செய்ய கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்கவில்லை. பும்ரா கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா ஏன் களத்திற்கு வரவில்லை என பிசிசிஐ விளக்கம் அளித்து இருக்கிறது. ரோகித் சர்மாவுக்கு கடினமான முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாகவே அவர் களத்திற்கு வரவில்லை எனவும் கூறப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க :

பங்களாதேஷ் டி20 தொடர் பதிரனா ரூல்டு அவுட்.. ஐபிஎல் விளையாடுவாரா?..
சிஎஸ்கே ரசிகர்கள் கலக்கம்

ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு இருக்கும் சூழலில், தற்போது அவர் காயம் அடைந்திருப்பது அந்த அணியின் ரசிகர்களை கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.