பங்களாதேஷ் டி20 தொடர் பதிரனா ரூல்டு அவுட்.. ஐபிஎல் விளையாடுவாரா?..சிஎஸ்கே ரசிகர்கள் கலக்கம்

0
81
CSK

ஐபிஎல் 17வது சீசன் மார்ச் மாதம் வருகின்ற 22 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க இருக்கிறது.

தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய பயிற்சியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்திருக்கின்றன. கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்து அவரும் பயிற்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை அணிக்கு பெரிய பின்னடைவாக நியூசிலாந்தைச் சேர்ந்த துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயத்தின் காரணமாக எட்டு வாரங்கள் கிரிக்கெட் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதியில் தான் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இரண்டாவது பகுதியில் அணிக்குள் கொண்டு வந்து விளையாட வைப்பார்களா? என்பதும் சந்தேகம்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய நட்சத்திரமாக உருவாகி இருக்கும் அதிரடி வீரர் சிவம் துபே காயம் காரணமாக ரஞ்சி கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இவரது காயத்தின் தன்மை என்ன சரியாகி விட்டதா என்பது குறித்தும் இன்னும் தெரியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பந்து வீச்சில் கடைசி கட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் இலங்கையை சேர்ந்த பதிரனா தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள ஏ கிரேடு காயத்தால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் இருந்து ரூல்டு அவுட் செய்யப்பட்டு இருக்கிறார்.

தற்பொழுது இவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் பெரிய அளவிலானது இல்லை என்றாலும் கூட, இந்த காயத்திலிருந்து அவர் வெளி வருவதற்கு எத்தனை வாரங்கள் ஆகும்? எத்தனை போட்டிகள் விளையாடாமல் போவார்? இல்லை விளையாடுவாரா? என்பது போன்ற எந்த தகவல்களும் சந்தேகத்துக்கிடமாகவே இருக்கிறது.

இதையும் படிங்க : 21 வருட உழைப்பு.. ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை.. இந்திய அணி 477 ரன்கள் குவிப்பு

ஒருவேளை இவரது காயம் பெரிதாகி இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட மாட்டார் என்றால், நிச்சயம் சென்னை அணிக்கு அது பின்னடைவாகவே அமையும். 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.