டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் தங்கள் அணியின் வீரர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மிக வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிகவும் வலிமையானதாக காணப்படுகிறது. எட்டு போட்டிகளில் விளையாடு இருக்கும் அந்த அணி மொத்தம் ஆறு போட்டிகளில் 12 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மற்றொரு அணியான குஜராத் டைட்டன்ஸ் 12 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலங்கள்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சரியான பேட்டிங் யூனிட் அமைந்திருக்கிறது. அவர்களுக்கு தரமான இரண்டு பேட்டர்கள் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கிறார்கள். அதே சமயத்தில் எல்லா பகுதிக்கும் சரியான பந்து வீச்சாளர்களை உள்ளடக்கிய பவுலிங் யூனிட்டும் அடங்கியிருக்கிறது.
இதன் காரணமாக அந்த அணி மிகவும் வலிமையாக ஆட்டத்தின் போது காணப்படுகிறது. இந்த முறை உறுதியாக பிளே ஆப் சுற்றுக்கு செல்வது மட்டும் இல்லாமல், கோப்பையை கைப்பற்றுவதற்கான அதிகபட்ச வாய்ப்பையும் கொண்ட அணியாக தெரிகிறது. இதற்கு அடுத்த இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வருகிறது.
வென்றால் மட்டும் போதாது
இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டன் அக்சர் படேல் பேசும் பொழுது “எப்பொழுதும் பீல்டிங் சிறப்பாக இருக்க வேண்டும். நீங்கள் எட்டு போட்டிகளில் தொடர்ந்து கேட்ச் வாய்ப்பை விட்டுக் கொண்டே இருந்தால் அது சரியானதாக இருக்காது. உங்களால் எல்லா போட்டிகளிலும் பீல்டிங்கில் தவறு செய்து கொண்டு இருக்கவே முடியாது. சரியான கேட்ச் எடுக்கப்படாததால் பவுலர்கள் விரக்தி அடைகிறார்கள்”
இதையும் படிங்க : ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட்டை கழட்டிவிட்ட தோனி.. சிஎஸ்கேவுக்கு வாங்காத காரணம் என்ன? – வெளியான தகவல்கள்
“இது எங்களுக்கு முக்கியமான சூழ்நிலையில் பெரிய பின்னடைவை உருவாக்கி விடும். நாங்கள் நிச்சயமாக இது குறித்து டிரெஸ்ஸிங் ரூமில் பேசுவோம். உங்களுக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் தனிப்பட்ட முறையில் மோசமான நாள் இருக்கலாம். ஆனால் பீல்டிங்கில் அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் இது அனைவரும் சேர்ந்து செயல்படும் ஒரு பகுதியாகும்” என்று கூறி இருக்கிறார்.






