கடைசி டெஸ்ட்.. முதல் இந்திய பேட்ஸ்மேன்.. காத்திருக்கும் ரோகித் சர்மா அதிரடி சாதனை

0
246
Rohit

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பெரிய சவால்களை அளித்துள்ள தொடராக அமைந்திருக்கிறது.

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலர் இந்த தொடரில் இடம் பெறாத காரணத்தினால், இளம் வீரர்களை வழி நடத்தி உள்நாட்டில் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இருந்தது.

- Advertisement -

மேலும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சந்திக்கும் பெரிய தொடராக இந்த தொடர் அமைந்திருந்தது. மேலும் தொடர் இந்தியாவில் நடைபெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டை சில ஆண்டுகளாக அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனித்திட்டங்களைக் கொண்டு வராமல் வெற்றி பெற முடியாது என்கின்ற கூடுதல் நெருக்கடியும் நிலவியது.

இந்த நிலையில் மிகச் சிறப்பான முறையில் இளம் வீரர்களை வழிநடத்தி தொடரை வென்றதோடு, மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முக்கியமான நேரத்தில் சதம் மற்றும் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் முதல் டெஸ்ட் தோற்றதற்கு பிறகு அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனித்திட்டங்களை கொண்டு வந்து களத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தினார்.

இத்தோடு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு சிக்ஸர் ரோகித் சர்மா அடிக்கும் பொழுது, இதுவரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தமாக 50 சிக்சர் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்கின்ற அரிய சாதனையை படைப்பார்.

தற்பொழுது பென் ஸ்டோக்ஸ் 44 போட்டிகளில் 78 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 31 போட்டிகளில் 49 சிக்ஸர் அடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் ரிஷப் பண்ட் 24 போட்டிகளில் 38 சிக்ஸர், ஜானி பேர்ஸ்டோ 34 போட்டிகளில் 27 சிக்ஸர், வியப்பூட்டும் வகையில் ஜெய்ஸ்வால் 8 டெஸ்ட் போட்டியில் 26 சிக்ஸர் அடுத்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. மழை மற்றும் பனி ஆபத்து எப்படி இருக்கிறது?.. மைதானம் மற்றும் ஆடுகள புள்ளிவிபரம்.. முழு தகவல்கள்

மேலும் சர்வதேச அளவில் அதிக சிக்சர் அடித்த பேட்ஸ்மேனாக 471 போட்டிகளில் 594 சிக்ஸர்கள் அடித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தான் முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.