தோனி காலத்துல விளையாடறதே பெரிய மகிழ்ச்சிதாங்க.. அவருக்கு சிறப்பான விஷயம் இதுதான் – ரஷீத் கான் பேச்சு

0
30
Dhoni

நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் கடைசியில் மகேந்திர சிங் தோனிக்கு பந்து வீசியது குறித்து ரஷித் கான் பேசி இருக்கிறார்.

குஜராத் அணி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குறித்தது. அத அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் 52 பந்தில் 103 ரன்கள், சுப்மன் கில் 55 பந்தில் 104 ரன்கள் என இருவரும் சதம் அடித்து அட்டகாசப் படுத்தினார்கள். அந்த அணிக்கு இவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த வலிமையான துவக்கமே வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

- Advertisement -

அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு டேரில் மிட்சல் 34 பந்தில் 63 ரன்கள், மொயின் அலி 36 பந்தில் 56 ரன்கள் எடுத்தார்கள். இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் பொழுது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 60 ஓவர்கள் தேவை என்கின்ற நிலை இருந்தது. ஏறக்குறைய ஆட்டம் 18 வது ஓவரிலேயே முழுமையாக குஜராத் அணியின் பக்கம் சென்று விட்டது.

இந்த நிலையில் கடைசியில் நின்ற தோனி மோகித் சர்மாவின் 19 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரும், ரஷீத் கானின் இருபதாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்களும், 1 பவுண்டரியும் அடித்தார். தோனி மொத்தம் 11 பந்துகளில் 1 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் எடுத்தார். மேலும் தோனி விளையாட உள்ளே வந்ததும், ரஷித் கான் அவரிடம் மரியாதை நிமித்தமாக கை கொடுத்துப் பேசி விட்டு பந்து வீச சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டி முடிவடைந்ததும் பேசிய ரஷீத் கான் கூறும் பொழுது “கில் மற்றும் சாய் சுதர்சன் விளையாடுவதில் பார்க்க நாம் விரும்புவோம். அவர்கள் விளையாடிய விதம் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது. இன்று வெற்றி பெற்ற பக்கத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு முதுகில் பிரச்சனை இருந்தது. தற்போது அது சரியாகிக்கொண்டே வருகிறது. நான் மிக விரைவில் சரியாகிவிடும்.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி ஓவர் 11 ரன்.. பாகிஸ்தானை அனாயசமாக வென்ற அயர்லாந்து அணி.. முதல் டி20 போட்டி முடிவு

மேலும் தோனிக்கு நான் ஏற்கனவே போட்டிகளில் பந்து வீசி இருக்கிறேன். தோனி எப்பொழுது மைதானத்திற்குள் வந்தாலும் அவருக்கு மட்டும் வித்தியாசமான அதிகப்படியான வரவேற்பு கிடைக்கும். இது உலகில் அவர் எங்கு விளையாடினாலும் நடக்கும். இப்படியான அன்பு அவருக்கு எல்லா இடங்களிலும் கிடைப்பதுதான் சிறப்பு. அவர் விளையாடும் காலத்தில் நானும் விளையாடுகிறேன், அவருக்கு பந்து வீசுகிறேன் என்பதெல்லாம் பெரிய மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.