கடைசி ஓவர் 11 ரன்.. பாகிஸ்தானை அனாயசமாக வென்ற அயர்லாந்து அணி.. முதல் டி20 போட்டி முடிவு

0
1453
Pakistan

தற்போது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு அயர்லாந்து அணி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த முறை பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக இளம் வீரர் சையும் அயூப் உடன் வந்த முகமது ரிஸ்வான் நான்கு பந்தில் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். சையும் அயூப் 29 பந்தில் 4 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸர் உடன் 45 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் பாபர் அசாம் வழக்கம் போல் கொஞ்சம் மெதுவாக விளையாடி 43 பந்துகளுக்கு 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 57 ரன்கள் எடுத்தார். பகார் ஜமான் 18 பந்தில் 20 ரன்கள் எடுக்க, கடைசியில் வந்த இப்திகார் அகமது ஆட்டம் இழக்காமல் 15 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் உடன் 37 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அயர்லாந்துக்கு கிரேஜ் யங் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிரில்லிங் 8, லார்கன் டக்கர் 4 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். பவர் பிளேவில் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை இழந்த காரணத்தினால் அயர்லாந்து அணிக்கு நெருக்கடியான நிலைமை உருவானது.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில் பால்பேரின் 55 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸர் உடன் 77 ரன்கள், ஹாரி டெக்டர் 27 பந்தில் 36 ரன்கள், டக்ரோல் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து அப்பாஸ் அப்ரிடி வீசிய கடைசி ஓவரில் 11 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. களத்தில் நின்ற கர்டிஸ் கேம்பர் இரண்டு பவுண்டரிகளுடன், ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் வெற்றிக்கான ரன்னை எடுத்து அயர்லாந்து அணிக்கு ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்.

இதையும் படிங்க : கேப்டன்சியில் மோசமாக சறுக்கும் ருதுராஜ்.. சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய 3 காரணம்.. ரசிகர்கள் அதிருப்தி

டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து சென்று முதல் போட்டியில் அந்த அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்திருக்கிறது. இதற்கு அடுத்து அங்கிருந்து அப்படியே பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு சென்று விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -