ஐபிஎல் தொடரில் திடீரென பெயரை மாற்றிய பட்லர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. காரணம் என்ன?

0
11145
Buttler

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரு போட்டிகளில் லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று, தற்பொழுது மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெளியில் வந்து வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லவே அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் கேப்டன் பட்லர் 13 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் உடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடந்த இரண்டு வருடங்களாக அவருக்கு ஐபிஎல் தொடர் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக செல்லவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இந்த போட்டியின் ஆரம்பத்திற்கு முன்பாக பட்லர் தன்னுடைய பெயரில் இருக்கும் தவறை திருத்தி, புதிதாக தன்னுடைய பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும் பல ஆண்டு காலமாக இந்த தவறு தொடர்ந்து வருவதாகவும், இங்கிலாந்து அணிக்காக இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்தும் கூட மக்கள் தொடர்ந்து தன்னை தவறான பெயரில் அழைக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இதுவரை அவரை Jos Buttler என்று அழைத்து வந்தார்கள். தற்பொழுது அவர் தன்னுடைய பெயரை திருப்பி Josh Buttler என்று அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து கிரிக்கெட் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மேலும் பெயரில் இருக்கும் பிழையை சரி செய்வதற்கான சரியான நேரம் இது என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஜோஷ் பட்லர் கூறும் பொழுது “வணக்கம் நான் இங்கிலாந்து கேப்டன் Jos Buttler. ஆனால் நான் இந்த பெயரில் வாழ்நாள் முழுவதும் தவறாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறேன். தெருவில் இருந்து என் அம்மா வரை எனக்கு வாழ்த்து அட்டையில் Josh Buttler என்றே குறிப்பிடுவார்கள். நான் 13 வருடங்களாக எனது தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு உலகக் கோப்பையையும் வென்று இருக்கிறேன். இறுதியாக இந்த சிக்கலை தீர்ப்பதற்கான நேரம் இதுவென்று நினைக்கிறேன். இனி என் பெயர் Josh Buttler” என்று அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னாலதான் ராஜஸ்தான் ஜெயிச்சது.. விரும்பினது எதுவும் நடக்கல.. தோல்விக்கு காரணம் இதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி

2018ஆம் ஆண்டு 4.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட பட்லர், 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 10 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மொத்தம் 17 போட்டியில் நான்கு சதங்களுடன் 863ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.