பும்ரா 3 அசத்தல் ரெக்கார்டுகள்.. ஆர்சிபி-க்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் முதல் பவுலராக மெகா சாதனை

0
153
Bumrah

இன்று ஐபிஎல் தொடரின் 25ஆவது பும்ரா மும்பை வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இன்று ஆர்சிபி அணியில் வில் ஜேக்ஸ், மகிபால் லோம்ரர் மற்றும் வைசாக் விஜயகுமார் மூன்று பேரும் பிளேயிங் லெவனில் வந்தார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் பியூஸ் சாவ்லா நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு ஸ்ரேயாஸ் கோபால் கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி இந்த முறை 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் வாய்ப்பை பெற்ற வில் ஜேக்ஸ் 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆகாஷ் மதுவால் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

ஆர்சிபி அணிக்கு எடுத்ததுமே நெருக்கடி உண்டானது. இதற்கு அடுத்து கேப்டன் பாப் டு பிளிசிஸ் மற்றும் ரஜத் பட்டிதார் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி அணியை மீட்டார்கள். இந்த ஜோடி 47 பந்துகளில் 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரஜத் பட்டிதார் 26 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 50 ரன்கள் எடுத்து ஜெரால்டு கோட்சி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து உள்ளே வந்த பேட்டிங் ஃபார்மில் இல்லாத மேக்ஸ்வெல் இந்த முறையும் மோசமாக ஏமாற்றினார். இந்த முறை நான்கு பந்துகளை சந்தித்து ரன்கள் ஏதும் எடுக்காமல் ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் காரணமாக முன்கூட்டியே தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் பாப் டு பிளிசிஸ் அரைசதம் அடித்து 40 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ஆனால் அதிரடியில் விட்டு தராத தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 53 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு ஆர்சிபி 196 ரன்கள் எடுத்தது. பும்ரா 4 ஓவர் பந்துவீசி 21 ரன்கள் தந்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : ரோகித் கோலி கிடையாது.. எந்த பயிற்சியாளர் கேப்டனுக்கும் பிடித்த 2 வீரர்கள் இவங்கதான் – கவாஸ்கர் பேச்சு

இன்று ஐந்து விக்கெட் கைப்பற்றியதின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக 5 விக்கெட் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளராக பும்ரா மாறி இருக்கிறார். மேலும் புவனேஸ்வர் குமார், பால்கனர் மற்றும் உனட்கட் ஆகியவருடன் இரண்டு முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக இணைந்திருக்கிறார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை மூன்று விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றியவர் என்ற சாதனையை 21ஆவது முறை மூன்று விக்கெட்டுக்கும் மேல் கைப்பற்றி பும்ரா சாதித்திருக்கிறார் . இரண்டாவது இடத்தில் சாகல் 20 முறை மூன்று விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி இருக்கிறார். பும்ரா மொத்தம் இந்த போட்டியில் மட்டும் மூன்று சாதனைகளை படைத்திருக்கிறார்.