கனடா நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட இருந்த பும்ரா.. அவரே வெளியிட்ட ஆச்சரியமான தகவல்

0
166
Bumrah

தற்போது இந்திய கிரிக்கெட் மட்டும் என்று இல்லாமல் உலக கிரிக்கெட்டிலும் மிக மதிப்பு வாய்ந்த வீரராக வலது கை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். இந்த நிலையில் அவர் ஆரம்ப காலகட்டங்களில் கனடா நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட இருந்ததாகவும் ஆச்சரியமான தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பும்ரா போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய கிரிக்கெட் வீரர்கள் பேட்ஸ்மேன்களில் கூட யாரும் இல்லை என்று சொல்லலாம். விராட் கோலி பேட்டிங்கில் மூன்று கோடி கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக இருந்தாலும் கூட, அவர் பேட்டிங்கில் வெளிப்படுத்துவதை விட, பும்ரா மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஆச்சரிய படத்தக்க முடிவுகளை அளிக்கிறார்.

- Advertisement -

உதாரணமாக நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கு கூட ஆடுகளம் சாதகமாக இல்லை. இப்படியான ஆடுகளங்களில் பும்ராவின் பந்துவீச்சு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உலகத் தரத்தில் இருந்தது.

வெற்றி பெற்றே ஆக வேண்டிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் ரிவர்ஸ் ஸ்விங் மூலமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சாய்த்த விதம் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய ஒன்றாக இருந்தது. இங்கிலாந்து துணை கேப்டன் ஒல்லி போப்பை ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கர் மூலம் பும்ரா கிளீன் போல்ட் செய்தது, அவரது திறமைக்கு சரியான ஒரு சாட்சியாக அமைந்தது.

இந்த நிலையில் இந்திய அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வரும் பும்ரா, ஆரம்ப காலகட்டத்தில் மொத்த குடும்பமும் கனடா சென்று குடியேற இருந்ததாகவும், அங்கும் அவர் எப்படியும் கிரிக்கெட்தான் விளையாடு இருப்பார் என்றும் ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்றைக் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கவுதம் கம்பீர் நவீன் உல் ஹக் உடன் சமாதானம்.. ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததாக விராட் கோலி சுவாரசிய பேச்சு

இதுகுறித்து பும்ரா கூறும் பொழுது “இந்தியாவில் மட்டும் தெருவுக்கு 25 சிறுவர்கள் இந்தியாவுக்கு விளையாடும் கனவுடன் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இந்த கனவு எனக்கும் இருந்தது. ஆனாலும் இங்கே பெரிய போட்டி நாம் ஒரு மாற்றுத் திட்டத்தையும் வைத்திருக்க வேண்டும். கனடாவில் என் உறவினர் வசிப்பதால் நான் அங்கே செட்டில் ஆகி விட முடியும் என நினைத்தேன். ஆனால் என் அம்மா அங்கு வர சம்மதிக்கவில்லை. நான் கனடா சென்று இருந்தாலும் அங்கு கிரிக்கெட் விளையாடி ஏதாவது செய்ய முயற்சி செய்திருப்பேன். ஆனால் தற்போது இந்திய அணிக்காகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாட முடிந்ததில் என் கனவு பலித்ததில் மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.