அவமானப்படுத்திய ரசிகர்கள்.. இனி நடக்காம இருக்க இத பண்ணுங்க- ஹர்திக் பாண்டியாவுக்கு மாஸ் ஐடியா கொடுத்த லாரா

0
13379

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 45 ரன்கள் குவித்தார். மும்பை அணித்தரப்பில் பும்ரா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 169 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 43 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது குஜராத் அணியின் ரசிகர்கள் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் இடத் தொடங்கினர். காரணம் ஹர்திக் பாண்டியா முதலில் மும்பை அணிக்கே விளையாடினாலும், 2022 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று அந்த ஆண்டிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார்.

அதற்குப் பிறகு 2023ஆம் ஆண்டு இறுதி போட்டி வரை அழைத்துச் சென்று குஜராத் ரசிகர்களின் நன் மதிப்பை பெற்றார். இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை டிரேடிங் முறையில் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது. இதுகுறித்து குஜராத் அணி தரப்பில் அவரே விருப்பப்பட்டு சென்றதாகவும் அவர் முடிவுக்கு நாங்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

கேப்டனாக்கி அழகு பார்த்த குஜராத் அணியை விட்டு செல்ல இவருக்கு எவ்வாறு மனம் வந்தது? என்று ரசிகர்கள் கோபமடைந்தனர். இந்த கோபத்தின் வெளிப்பாடாக மைதானத்தில் ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு முறை பந்துக்கு அருகில் செல்லும்போது அவருக்கு எதிராக கூச்சலிட தொடங்கினர். அப்போது ஹர்திக் பாண்டியா கோபம் அடைந்தது தொலைக்காட்சி வாயிலாக தெரிந்தது. இதனைக் கண்ட வர்ணனையாளர் கெவின் பீட்டர்சன் “ஹார்திக் பாண்டியாவை அகமதாபாத்தில் கத்துவது போல் எந்த ஒரு இந்திய வீரரும் கொந்தளித்ததை நான் இதுவரை பார்த்ததில்லை. இது ஒரு அரிய நிகழ்வு” என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க: புரியாமல் நின்ற ரோகித்.. கட்டாயப்படுத்தி லாங் ஃபீல்டிங் அனுப்பிய ஹர்திக்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கோபம்

இதனைக் கண்ட மற்றொரு வர்ணனையாளரான இயன் பிஷப் ஹர்திக் பாண்டியா அகமதாபாத் ரசிகர்களின் மனதை வெல்ல என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க, அதற்கு பதில் அளிக்கும் விதமாக மற்றொரு வர்ணனையாளரான மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த பிரைன் லாரா “ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்காக விளையாட வேண்டும். அடுத்த முறை இதே மைதானத்தில் விளையாடினால் ரசிகர்களின் மனதை வெல்ல முடியும்” என்று கூறினார்.