நிதிஷ் ரெட்டி பேட்டிங் ப்ளுக் இல்ல.. அதுதான் கிரிக்கெட்… போன வருஷமே அந்த பையன தெரியும் – பிரையன் லாரா பேட்டி

0
130
Nitish

நேற்று பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி கடைசி வரையில் மிகவும் பரபரப்பாக சென்றது. இறுதியில் இந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி செய்திருந்தார்.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் டாஸ் வெல்ல, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் நான்காவது வீரராக அனுப்பப்பட்ட இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி 37 பந்தில் அதிரடியாக 64 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடக்கம். இதன் காரணமாக ஹைதராபாத் அணி 182 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரிய அளவில் மேல் வரிசை பேட்ஸ்மேன்கள் அடிக்கவில்லை. கீழ் வரிசையில் வந்த சஷான்க் சிங் மற்றும் அசுடோஸ் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை திருப்பினார்கள். ஆனாலும் வெல்ல முடியவில்லை. மேலும் ஹைதராபாத் பந்துவீச்சின் போது நிதீஷ் குமார் ரெட்டி ஜிதேஷ் சர்மா விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த லாரா நிதீஷ் குமார் பற்றி கூறும்பொழுது “கடந்த ஆண்டு நான் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த பொழுது அவர் என்னுடன் அணியில் இருந்தார். வலைப் பயிற்சியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவர் கடினமாக உழைக்கிறார்.

கடந்த வருடம் அவர் விளையாடுவதைப் பற்றி நாங்கள் நிறைய பேசினோம். ஆனால் அவரது அனுபவயின்மை காரணமாக அவரை விளையாட வைக்க முடியவில்லை. ஆனால் அவர் இந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்காக வந்து சிறப்பாக விளையாடும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மயங்க் அகர்வால் தற்பொழுது காயம் அடைந்திருக்கிறார். எனவே நிதிஷ் குமார் இந்த ஐபிஎல் தொடரில் நிறைய போட்டிகளில் விளையாடப் போகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 172 ஸ்டிரைக் ரேட்.. சிஎஸ்கே தவறவிட்ட தங்கம்.. யார் இந்த 20 வயது நிதிஷ் குமார் ரெட்டி

அவர் தற்போது நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய வருகிறார். மேலும் அவர் இதுவரையில் ஒட்டுமொத்தமாக எட்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். நேற்று அவருடைய பேட்டிங் ப்ளூக் கிடையாது. அதுதான் சரியான கிரிக்கெட். மேலும் அவர் பந்தும் வீசக்கூடியவர். எனவே அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.