நேத்து ஜெய்ஸ்வால் கிட்ட இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?.. பையன் வேற மாதிரி ரகம் – பிரையன் லாரா பாராட்டு

0
225
Jaiswal

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தங்களது சொந்த மைதானத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 60 பந்துகளில் 14 ரன்கள் குவித்து ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஃபார்முக்கு திரும்பினார். இவரது பேட்டிங் குறித்து லெஜெண்ட் பிரையன் லாரா பாராட்டி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் 180 ரன்கள் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் சிறப்பான பேட்டிங் பங்களிப்பு செய்தார். கடந்த ஏழு போட்டிகளாக அவரது பாட்டில் இருந்து அவரது திறமைக்கு ஏற்ற ரன்கள் வராமல் இருந்து வந்தது. ஆனால் நேற்று அவரது அணுகு முறையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு மிகச் சிறப்பான முறையில் விளையாடும் சதம் அடித்தார்.

- Advertisement -

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிக வெற்றிகரமாக இருந்து திரும்பிய ஜெய்ஸ்வால், உடனடியாக அதற்கு நேர் எதிர் வடிவமான டி20 கிரிக்கெட்டில் தன்னை மாற்றி தகவமைத்துக் கொள்வதற்கு தடுமாற்றத்தை கண்டார். இதன் காரணமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு ஏழு இன்னிங்ஸ்கள் தொடர்ந்து பேட்டிங்கில் தோல்வியாக அமைந்தது.

இதன் காரணமாக அவரை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டுமா? என்கின்ற சந்தேகப் பேச்சுகள் இருந்தன. இப்படியான நிலையில்தான் நேற்று மிகச் சிறப்பான முறையில் விளையாடும் 59 பந்துகளில் சதம் அடித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

ஜெய்ஸ்வால் பேட்டிங் அணுகுமுறை குறித்து பேசி இருக்கும் பிரையன் லாரா கூறும்பொழுது “ஆமாம் இது ஜெய்ஸ்வாலின் மிக அழகான இன்னிங்ஸ். மேலும் பேட்டிங் செய்யும்பொழுது மிக ஆக்ரோஷமாக அதிரடியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர் இன்னும் நிறைய ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்கோர் செய்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால், அவர் பந்துக்கு நேரம் கொடுத்து, மிக சரியான கிரிக்கெட் ஷாட்கள் விளையாடுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : மறுபடியும் முட்டாள்தனத்தால் தோற்றுவிட்டு.. சிரிச்சுகிட்டு பேட்டி தரலாம் – ஸ்டெயின் ஹர்திக் பாண்டியா மீது விமர்சனம்

மேலும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவர் அனைத்து வகையான ஷாட்களையும் விளையாடுகிறார் என்பதைதான். அவர் இந்தியாவுக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடும் திறமை பெற்ற வீரர். எனவே அவரிடம் அனைத்து ஷாட்களும் இருக்கிறது. நீங்கள் பந்துவீச்சாளர்களை அடித்து விளையாடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு அங்கு அட்வான்டேஜ் கிடைக்கிறது, இதைத்தான் அவரது ஆட்டத்தில் நான் விரும்பினேன். ஜெய்ப்பூர் மாதிரியான ஒரு ஆடுகளத்தில், ரன்களை துரத்தும் பொழுது நீங்கள் கடைசி வரை செல்ல வேண்டும், நேற்று ஜெய்ஸ்வால் கடைசி வரை விளையாடி, அருமையான பேட்டிங் முதிர்ச்சியை காட்டினார். எனக்கு அவரது பேட்டிங்கில் பெரிய மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.