மும்பை அணி வீரர் செய்த மிக பெரிய தவறு: எச்சரித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக்

0
174
Mumbai Indians IPL

நேற்றைய ஐபிஎல் போட்டி டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடந்தது. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் குவித்தது.

சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் 4 ரன்களுக்கு அவுட் ஆக முதலில் சென்னை அணி சிறுது தடுமாறியது. அதன் பின்னர் டுப்லஸ்ஸிஸ் மற்றும் மொயின் அலி ஜோடி மிக அற்புதமாக விளையாடி 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. டுப்லஸ்ஸிஸ் 28 பந்துகளில் 50 ரன்களும் மொழிகளில் 36 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

ஆண் பின்னர் இறுதியாக வந்த அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் அடித்து மும்பை அணி பந்து வீச்சாளர்களை கதிகலங்க வைத்தார். இதன் காரணமாக சென்னை அணி 218 ரன்கள் முதல் இன்னிங்ஸில் குவித்தது.

அபாரமாக விளையாடிய கிரன் பொல்லர்டு, கடைசி பந்தில் வெற்றி பெற்ற மும்பை அணி

- Advertisement -

இமாலய இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய மும்பை அணி ஆரம்பத்தில் மிக அற்புதமாக விளையாடியது. துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் டீ காக் மிக அற்புதமாக விளையாடினார். ஆனால் சிறிது நேரத்திலேயே 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ரோகித் சர்மாவும் 28 பந்துகளில் 38 ரன்கள் அடித்து டீ காக்கும் அவுட்டாகி செல்ல, மும்பை அணி சிறிது தடுமாறியது.

அதன் பின்னர் குருணல் பாண்டியா மற்றும் பொல்லார்டு ஜோடி சேர்ந்து மிக அற்புதமாக விளையாடி மும்பை அணியை வெற்றிபெற வைத்தனர். அதிலும் குறிப்பாக நேற்று பொல்லார்டு ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 34 பந்துகளில் 87 ரன்கள் அடித்து சென்னை அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார். நேற்று அவர் ஆறு பவுண்டரிகளும் எட்டு சிக்சர்களும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி வீரர் செய்த தவறை சுட்டிக்காட்டிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக்

நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் லுங்கி எங்கடி வீசினார். ஒரு கட்டத்தில் மும்பை அணிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு பொல்லார்டு ஆட்டத்தைக் கொண்டு வந்தார். எனினும் இறுதியில் பொல்லார்டு கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்க, மும்பை அணி கடைசி பந்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி பந்தை லுங்கி எங்கடி வீசுவதற்கு முன்பாகவே எதிர் முனையில் நின்று கொண்டிருந்த தவல் குல்கர்னி கிரீசை விட்டு வேகமாக நடந்து சென்றார். வேகமாக ஓடிய ரன்கள் எடுக்கவே அவ்வாறு அவர் முன்னரே நடந்து சென்றார். இவ்வாறு இதே தொடரில் முன்னதாக ஒரு போட்டியில் பொல்லார்டு பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாகவே கிரீஸை விட்டு வேகமாக முன் நடந்து சென்று இருக்கிறார்.

இந்த தவறை சுட்டிக் காட்டியுள்ள பிராட் ஹாக் இவ்வாறு வீரர்கள் பந்து வீசுவதற்கு முன்பாகவே கிரீஸை விட்டு நகர்ந்து செல்வது சரியல்ல என்று கூறியுள்ளார். இவ்வாறு நடந்து கொள்வது ஆட்டத்தின் நெறியை உடைப்பது போன்றது ஆகும். எனவே இனி வரும் போட்டிகளில் இவ்வாறு இவர்கள் நடந்து கொள்ளக் கூடாது என்று ஆஸ்திரேலிய வீரர் பிராட் இறுதியாக தன்னுடைய கருத்தினை கூறினார்.

- Advertisement -