சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு காலத்தில் விளையாடிய பிரபலமான நட்சத்திர வீரர்கள்

0
903
Andrew Flintoff and Nuwan Kulasekara CSK
Photo: BCCI/IPL

ஒரு ஐம்பது வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தாலும் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட போவதில்லை. அந்த அளவுக்கு அந்த அணி ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பான வகையில் விளையாடி வந்துள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக அற்புதமாக தன்னுடைய விளையாடி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே நிச்சயமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும், என்கிற அளவுக்கு அந்த அணி அற்புதமாக விளையாடக்கூடிய அணியாகும். அப்படிப்பட்ட அந்த அணியின் பெயரைச் சொன்னாலே நம் அனைவருக்கும் முதலில் வரும் இரு பெயர்கள் மகேந்திரசிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா. இவர்கள் இருவரும் ஆரம்ப காலம் முதல் இன்று வரை சென்னை அணிக்காக விளையாடி வந்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

அதன் பின்னர் வந்து கலந்து கொண்ட ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ மற்றும் டுப்லஸ்ஸிஸ் பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் ஒரு காலத்தில் சென்னை அணியில் பங்கு பெற்று விளையாடிய நமக்கு அவ்வளவாக தெரியாத மூத்த பிரபலமான சில வீரர்களை பற்றி பார்ப்போம்

நுவான் குலசேகரா

இலங்கையைச் சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர ஆவார். அவரது பெயரை நாம் கேள்விப்பட்டாலே, 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் அவர் வீசிய பந்தை மகேந்திர சிங் தோனி சிக்சர் அடித்து உலகக் கோப்பைக்கான வெற்றி ரன்னை அடுத்தது தான் நம் அனைவரது நினைவுக்கு வரும்.

குலசேகரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு விளையாடினார் என்பது பலருக்கும் தெரியாது. இவர் இந்த அணிக்காக 6 போட்டிகளில் விளையாடியுள்ளார். 6 போட்டிகளில் விளையாடிய குலசேகரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணிக்காக விளையாடிய அவரது பௌலிங் எக்கானமி 7.06 ஆகும்.

- Advertisement -

ஆண்ட்ரூ பிளின்டாப்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஆன பிளின்டாப் சென்னை அணிக்காக 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது பங்களிப்பு அவ்வளவு சிறப்பாக படவில்லை. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இவர் வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேட்டிங்கில் மூன்று போட்டிகளையும் சேர்த்தே இவர் 62 ரன்கள் அடித்துள்ளார்.இவரது அதிக பட்ச ஸ்கோர் 24 ஆகும்.

ஜார்ஜ் பெய்லி

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். பலருக்கும் இவர் பஞ்சாப் அணிக்காக விளையாடிய தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதற்கு முன்னரே இவர் மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் விளையாடினார் என்பது பலருக்கும் தெரியாது. ஜார்ஜ் பெய்லி மொத்தமாக 3 போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி உள்ளார். மூன்று போட்டிகளையும் சேர்த்து 63 ரன்கள் குவித்துள்ளார், இவரது அதிகபட்ச ஸ்கோர் 30 ஆகும். மேலும் இவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 95.45 தான்.

ஜஸ்டின் கெம்ப்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரர் கெம்ப் சென்னை அணிக்காக 2010ஆம் ஆண்டு விளையாடினார். மொத்தம் 5 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

ஐந்து போட்டிகளில் விளையாடி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வர கைப்பற்றியுள்ளார் மேலும் பேட்டிங்கில் ஐந்து போட்டிகளையும் சேர்த்து இவர் வெறும் 26 ரன்கள் தான் அடித்துள்ளார்.

திசாரா பெரேரா

இலங்கையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான திசாரா பெரேரா சென்னை அணிக்காக 2010ஆம் ஆண்டு விளையாட தொடங்கினார். அந்த ஆண்டு தொடர் முழுவதும் அவ்வளவாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை வெறும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் பந்து வீசிய இவர் அவ்வளவு சிறப்பாக பந்து வீசவில்லை என்பதே உண்மை. அந்தப் போட்டியில் இவரது பவுலிங் எக்கானமி 19 ஆகும்.

ஜேசன் ஹோல்டர்

Jason Holder CSK

வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரனாக தெரிந்துகொள்ள 2013-ம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடினார். அதுதான் அவருக்கு முதல் ஐபிஎல் தொடர் ஆகும். சென்னை அணிக்காக மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடியுள்ளார். 6 போட்டிகளில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். அதன் பின்னர் இவர் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார்.

ஸ்காட் ஸ்டைரீஸ்

Scott-Styris-Chennai-Super-Kings

நியூசிலாந்து சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் ஸ்காட் ஸ்டைரீஸ் ஆரம்ப காலகட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். 2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி  கோப்பை வென்ற போது இவரும் அந்த அணியில் ஒரு முக்கிய வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு இவர் விளையாடவில்லை. அதற்கு அடுத்த ஆண்டான 2011ம் ஆண்டு சென்னை அணிக்காக இவர் விளையாடினார். இரண்டு போட்டிகளில் விளையாடி வெறும் 5 ரன்கள் மட்டும் தான் குவித்தார். மேலும் விக்கெட் எதுவும் இவர் கைபற்ற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மோசமாக விளையாடிய காரணத்தினால் இவரை அந்த ஆண்டு முடிந்தவுடன் சென்னை அணி தனது அணியில் இருந்து நீக்கி விட்டது.