தேஷ்பாண்டே ரன்களை வழங்கும் மிஷின்..! கிண்டல் செய்த ரசிகர்.. ஒரே பதிலால் கிளீன் போல்ட்

0
5086

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அனுபவிக்க நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. இருப்பினும் தோனியின் அபார கேப்டன்சியால் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டி வரை வந்திருக்கிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள 28 வயதான வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவை ரன் வழங்கும் மிஷின் என ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். தேஷ்பாண்டே 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறையாமல் பந்துகளை வீசி வருகிறார்.

- Advertisement -

ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 15 போட்டியில் விளையாடிய தேஷ்பாண்டே இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இந்த நிலையில் குவாலிபையர் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக பந்து வீசிய தேஷ்பாண்டே நான்கு ஓவர்களில் 43 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதற்கு ரசிகர் ஒருவர் தேஷ் பாண்டே ரன்களை வழங்கும் மிஷினாக இருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் 40 ரன்கள் குறையாமல் ரன்களை வழங்குகிறார் என கிண்டல் செய்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள துஷார் தேஷ்பாண்டே, உங்களுக்கு தைரியம் இருந்தால் களத்தில் வீரராக வந்து விளையாடுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் நான் வேண்டுமானால் சவால் விடுகிறேன்.  உங்களால் பவுண்டரி லைனை தாண்டி ஆடுகளத்திற்கு உள்ளே கூட வர முடியாது என்று தேஷ்பாண்டே காட்டமாக பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

தேஷ்பாண்டேவின்  இந்த டிவிட்டுக்கு எதிர்ப்பும் ஆதரவும் இருக்கிறது. ஒரு சிலர் இதுபோன்ற விமர்சனங்களை கிரிக்கெட் வீரர்கள் காதில் வாங்க கூடாது என்றும், இதற்கு பதில் அளிப்பதன் மூலம் கவனச் சிதறல் ஏற்படும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட்டை பார்க்கும் ரசிகர்கள் தங்களது கருத்தை சொல்லத்தான் செய்வார்கள் என்றும் , அதற்காக அவர்கள் கிரிக்கெட் வீரராக இருந்தால் மட்டும் தான் விமர்சனம் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் தேஷ் பாண்டே விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பதாக சிலர் கருத்தும் கூறியிருக்கிறார்கள்.