நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிக சுமாராக விளையாடிய 11 வீரர்களைக் கொண்ட அணி இது தான் – முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா

0
601
Hardik Pandya and Suresh Raina

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று நடைபெற்று முடிந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நேற்று சென்னை அணி 4-வது முறையாக ஐபிஎல் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி பெற்றது.

ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன் முன்னணி விமர்சனகர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட சிறந்த 11 வீரர்களைக் கொண்ட அணியை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் நிலையில், முன்னணி கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா நினைப்பை ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாராக விளையாடிய பதினொரு வீரர்களை தேர்ந்தெடுத்து ஒரு அணியாக வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ள 11 சுமாரான வீரர்களைக் கொண்ட அணி

இந்த அணி பட்டியலில் முதலில் ராஜஸ்தான் வீரர் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் பஞ்சாப் வீரர் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் டி20 போட்டிகளை பொறுத்தவரையில் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடக் கூடிய திறமைப் பெற்றவர்கள். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இவர்கள் இருவரும் மிகவும் மோசமாக விளையாடினர்.

இவர்களைத் தொடர்ந்து சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் கொல்கத்தா அணி வீரர் இயான் மோர்கன் இருவரும் இருக்கின்றனர். சென்னை அணி கோப்பையை வென்ற போதிலும், சுரேஷ் ரெய்னா தன்னுடைய வழக்கமான பார்மில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை. அதேசமயம் இறுதிப் போட்டி வரை முன்னேறிய கொல்கத்தா அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடி வந்த நிலையில், மோர்கன் மிக மோசமாகவே விளையாடினார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக மும்பை அணியைச் சேர்ந்த பாண்டியா பிரதர்ஸ் இருவரும் இருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியா சிறப்பாக விளையாடக் கூடிய ஆல்ரவுண்டர் வீரர்கள். ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இவர்கள் இருவரும் தங்களுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாடவில்லை.

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் மற்றும் பெங்களூரு அணி வீரர் கைல் ஜேமிசன் இருக்கின்றனர். ரியான் பாராக் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் மிகப்பெரிய அளவில் சொதப்பினார். அதேபோல அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஜேமிசன் இறுதிகட்டத்தில் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை. அதன் காரணமாகவே நிறைய போட்டிகளில் அவர் பெயர் இடம்பெறவில்லை.

அடுத்தபடியாக பெங்களூர் அணியை சேர்ந்த மற்றொரு ஆல்ரவுண்டர் வீரர் டேனியல் கிறிஸ்டின் உள்ளார். பவுலிங்கில் சற்று சொதப்பினாலும் பேட்டிங்கில் அசத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தொடர் முழுக்க 1 ரன்னை தாண்டாமல் ஏமாற்றினார். இறுதி இரண்டு வீரர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் புவனேஸ்வர் குமார் உள்ளனர்.

இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினின் சுழல் அந்த அளவுக்கு எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஹைதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தன்னுடைய பேஸ் பவுலிங்கில் வேகம் காட்டாதது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுக்க சுமாராக விளையாடிய 11 வீரர்கள் கொண்ட அணி

லியம் லிவிங்ஸ்டன், நிக்கோலஸ் பூரன், சுரேஷ் ரெய்னா, இயொன் மோர்கன், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், குருனால் பாண்டியா, கைல் ஜேமிசன், டேனியல் கிறிஸ்டின், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் புவனேஸ்வர் குமார்.