சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்காத ஆப்கானிஸ்தான் ஸ்பின்னரை அணியில் சேர்த்துள்ள பெங்களூர் – காரணம் இதுதான்

0
266
Izharulhaq Naveed RCB Net Bowler

2022 ஐ.பி.எல்-ன் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் நடத்தப்பட்டு, தற்போது ஒவ்வொரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல் அணிகளில் பெரிய இரசிகர் பட்டாளத்தையும், வணிகத்தையும் கொண்டிருக்கும் அணிகளில் ஆர்.சி.பி அணியும் ஒன்று.

- Advertisement -

ஆர்.சி.பி அணிக்கு கடந்த சீசன் வரை கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி அப்பதவியிலிருந்து விலகிய நிலையில், ஏலத்தில் 7 கோடி கொடுத்து, சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரரும், தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டனான பாப் டூ பிளிசஸை வாங்கி, கேப்டனாக அறிவித்திருக்கிறது ஆர்.சி.பி அணி நிர்வாகம்!

ஐ.பி.எல் தொடருக்கான முன் பயிற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆர்.சி.பி அணி நிர்வாகம் வெளிநாட்டு இளம் சுழலர் ஒருவரை வலைப்பயிற்சி பந்துவீச்சாளராய் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயதான இளம் லெக்-ஸ்பின்னர் இஷாருல்ஹக் நவீத்.

இவர் ஆப்கானிஸ்தான் யு 19 அணி வீரர். லிஸ்ட் ஏ போட்டிகளில் ஏழு ஆட்டங்களில் விளையாடி, 378 பந்துகள் வீசி, 249 ரன்களை விட்டுக்கொடுத்து, 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

உலகெங்கும் T20 தொடர்கள் மற்றும் சர்வதேச டி20 ஆட்டங்களில், ஆப்-ஸ்பின் என்பது ரன்களை வாரிக்கொடுப்பதாய் பார்க்கப்பட்டு, ஆப்-ஸ்பின் பவுலர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆப்-ஸ்பின் வீசப்பட்டாலும் பார்ட்-டைம் பவுலர்களால்தான் வீசப்படுகிறது.

தற்போது டி20 போட்டிகளில் லெக்-ஸ்பின், லெப்ட்-ஹேன்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின், சைனாமேன் ஸ்பின் வகைகளைத்தான் பயிற்சியாளரும், கேப்டனும் விரும்புகிறார்கள்.

எனவே இப்படியான பந்து வீச்சு வகையை அதிகம் ஆடவேண்டியதிருக்கும் என்று ஆப்கானிஸ்தானின் இளம் லெக்-ஸ்பின்னரை வலைப்பயிற்சிக்காக ஆர்.சி.பி ஒப்பந்தம் செய்திருக்க கூடும்!