“இந்தியா 5 விக்கெட்டில் ஜெயிச்சிருக்கலாம்.. ஆனா என் டீம்க்குதான் பெருமை” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

0
1538
Stokes

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நான்காவது போட்டியில் வைத்து வென்று இருக்கிறது. கடைசி போட்டி தரம்சாலா மைதானத்தில் நடக்க இருக்கிறது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 46 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக விளையாடியதால் தோல்வி அடைய வேண்டியதாக அமைந்தது.

- Advertisement -

நேற்று இந்திய அணி 40 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பில்லாமல் இருந்தது. மேற்கொண்டு 84 ரன்களுக்கும் விக்கெட் இழப்பில்லாமல் இருந்த இந்திய அணி, அங்கிருந்து மேற்கொண்டு 36 ரன்கள் மட்டும் எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கில் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி, விக்கெட்டை விடாமல் இந்திய அணியை வெல்ல வைத்தார்கள். இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

தோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “இது ஒரு சிறந்த டெஸ்ட் போட்டி என்று நான் நினைக்கிறேன். ஸ்கோர் போர்டை பார்த்தால் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக காட்டும். ஆனால் ஸ்கோர் போர்டு சொல்வதற்கு மதிப்பு கிடையாது. ஏனென்றால் இந்த போட்டியில் மிகக் கடுமையாக போராடினோம்.

- Advertisement -

நான் என்னுடைய அணி குறித்துதான் பெருமைப்பட முடியும். எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டுக்கும் முயற்சிக்கும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அனுபவம் இல்லாத எங்களது சுழற்பந்து வீச்சாளர்களை இங்கு மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட வைப்பது தான் கேப்டன்ஷியில் என்னுடைய ஒரு பகுதியாக இருக்கிறது.

இந்த ஆடுகளத்தில் நேற்று ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவது மிக கடினமாக இருந்தது. இங்கு எதுவும் சாத்தியம் போல் தோன்றியது. இந்த ஆடுகளம் மேற்கொண்டு மாறாது என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தினோம்.

ஜோ ரூட் மீதான விமர்சனங்கள் நியாயமற்றவை. அவர் இங்கிலாந்து அணிக்காக எவ்வளவோ ரன்கள் குவித்திருக்கிறார். அதே சமயத்தில் பசீர் குறைவான கிரிக்கெட் மட்டுமே விளையாடி, இந்த போட்டியில் எட்டு விக்கெட் வீழ்த்தி இருப்பது மிகப்பெரிய விஷயம். தொடர்களை வெல்ல வேண்டுமென்றால் போட்டிகளை வெல்ல வேண்டும்.

இதையும் படிங்க : “துருவ் ஜுரல்கிட்ட இதைத்தான் சொன்னேன்.. என்னுடைய தனித்திட்டம் இதுதான்” – சுப்மன் கில் பேட்டி

நான் என் அணிக்கு எப்பொழுதும் சொல்லும் விஷயம் என்னவென்றால், நாங்கள் எதையும் விட்டுவிடவில்லை, மிகக் கடுமையாக போராடினோம், அதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்பதைதான்” என்று கூறியிருக்கிறார்.