நேற்று மிக முக்கியமான போட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன்கள் மீது அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் வெயிலுக்காக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் கருப்பு மண் ஆடுகளம் என்பதால் ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்பதை அவர்கள் தெரிந்திருந்தார்கள். விக்கெட்டுகளை வேகமாக இழக்காமல் பொறுமையாகவும் விளையாடினார்கள்.
இப்படி இருந்த போதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் அந்த அணி மொத்தம் இழந்த ஐந்து விக்கெட்டுகளில், கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அவர்களால் விக்கட்டை கைவசம் வைத்திருந்த போதும் கூட அதிரடியாக விளையாட முடியாதது ஆச்சரியமாக இருந்தது.
அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடிய பொழுது அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா, மூன்றாவது இடத்தில் வந்த டேரில் மிட்சல் இருவருமே அடிப்பதற்கான இன்டெண்ட்டை காட்டிவிளையாடினார்கள். எனவே ஆரம்பத்தில் சிஎஸ்கே அணிக்கு நல்ல ஸ்கோர் கிடைத்தது. சிஎஸ்கே அணி எளிதாக பதிந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா பேசும் பொழுது “ஆடுகளம் எதுவாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அதற்கு தகுந்தார் போல் ஆடுகளம் எதுவாக தான் இருந்தது. அதே சமயத்தில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். எங்கள் பேட்டிங்கை பொறுத்த வரையில் மிடில் ஓவர்களில் நாங்கள் ரன் அடிப்பதற்கான இன்டெண்ட் இல்லாமல் இருந்து விட்டோம். அந்த நேரத்தில் விளையாடிய நிறைய டாட் பந்துகள் எங்களது வேகத்தை குறைத்து விட்டது.
இதையும் படிங்க: சென்னையின் கடவுள் தோனி.. நீங்க வேணா பாருங்க இது நடக்கத்தான் போகுது – அம்பதி ராயுடு பேச்சு
மேலும் எங்களுக்கு கேப்களில் விளையாடி ஓடி ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற எண்ணமே இல்லை. நிலைமை மிகவும் வெயிலாக இருக்கிறது அதனால் வீரர்களால் முடியவில்லை என்பதையும் புரிந்து கொள்கிறேன். ஆனால் சென்னையும் நன்றாக பந்து வீசியது. இது 170 முதல் 180 ரன்னுக்கான விக்கெட். நாங்கள் 25 முதல் 30 ரன்கள் குறைவாக இருந்து விட்டோம்” என்று கூறியிருக்கிறார்.