நாளை 4வது டெஸ்ட்.. மழை வாய்ப்பு.. ஆடுகளம்.. மைதான புள்ளி விபரங்கள்.. முழு தகவல்கள் உள்ளே

0
658
Rohit

இந்த முறை இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் மிக முக்கியமான மைதானங்கள் கொடுக்கப்படவில்லை. அதேபோல் மைதானத்தின் ஆடுகளங்களும் வழக்கமான முறையில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லை.

இதன் காரணமாக நடந்திருக்கும் எல்லா டெஸ்ட் போட்டிகளும் நான்காவது நாளுக்கு சென்று இருக்கின்றன. இங்கிலாந்து வேகமாக விளையாடுகின்ற காரணத்தினால்ஐந்தாவது நாளுக்கு செல்லவில்லை. மற்ற அணிகளாக இருந்திருந்தால் போட்டி ஐந்தாவது நாளுக்கு கட்டாயம் மூன்று டெஸ்டுகளிலும் சென்றிருக்கும்.

- Advertisement -

இதுவரையில் நடைபெற்ற மூன்று டெஸ்டில் இந்தியா இரண்டிலும் இங்கிலாந்து ஒன்றிலும் வென்று இருக்க, இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியான டெஸ்ட் ஆக நான்காவது டெஸ்ட் அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் நாளை ஜார்கண்ட் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது. பொதுவாக இங்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் இருக்கும். பந்து முதல் நாளில் இருந்து திரும்பினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று இங்கிலாந்து நினைக்கிறது. மேலும் இங்கிலாந்து துணை கேப்டன் இந்தியா ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் மட்டுமே வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டிராவில் முடிந்தது. 2019 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 200 ரன்களுக்கு மேலான ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

மேலும் இங்கு பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்ததே தனிநபர் அதிகபட்சமாக இருக்கிறது. மேலும் அதிக விக்கெட் கைப்பற்றியவராக ரவீந்திர ஜடேஜா இருந்து வருகிறார். முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 400 க்கு மேலாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 300க்கு மேலாகவும் இருக்கிறது.

இதையும் படிங்க : 4வது டெஸ்ட்.. நாளை வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் XI.. 3 மாற்றங்கள் நடக்குமா?

போட்டி போட்டி துவங்கி நடைபெறும் பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கான வானிலையில், முதல் நான்கு நாட்கள் மழை குறுக்கீடு எதுவும் இல்லாமல் 26 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ஐந்தாவது நாள் மழைக்கான அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. போட்டி ஐந்தாவது நாளுக்குள் சென்றால், மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு!